Wednesday, December 21, 2022

#60 - 162-163-164 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

162. ஸ்ரீ அதீந்த்3ராய நம:

அதித்3ரவ்யஸித்3தி4 3லாதி33ளீவஅதீந்த்3ரனே

ஆத3ரதி3 நமோ எம்பெ3 பரம ஶ்வர்ய பூர்ண

ஸுதா4 விப்ரோத்தமகெ3 த்ரவ்யஸம்பத் ஞானஸித்3தி4

வாததே3 சிஷ்ய தே3ஶர்மகு3 ஹாகெ3வே இத்தி 

அதிக செல்வம், தக்க பலன்கள் ஆகியவற்றை அளிப்பவனே ‘அதீந்த்ரனே உனக்கு மரியாதை உடனான நமஸ்காரங்கள். அபாரமான ஐஶ்வர்ய பூர்ணனே. ஸுதாம போன்ற விப்ர உத்தமனுக்கு, அபாரமான செல்வங்களை, ஞானத்தை அளித்த வாஸுதேவனே. தேவர்மா என்னும் பக்தனுக்கும் அப்படியே நீ அருளினாய். 

163. ஸ்ரீ ஸங்க்3ரஹாய நம:

ஸ்தோத்ர ஸ்வீகரிஸுவஸங்க்3ரஹநமோ நினகெ3

துதிஸுவவர 4க்தி நோடி3 க்3ரஹிஸுவி ஸ்தோத்ர

ஸ்துதிஸே ஸ்வாயம்பு4 க்3ரஹிஸி மனுவ காய்தி3

ஹஸ்திராஜன ஸ்தோத்ரக்3ரஹிஸி ரக்ஷிஸிதி3 பே33 

பக்தர்களின் ஸ்தோத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் ‘ஸங்க்ரஹனே உனக்கு நமஸ்காரங்கள். அப்படி ஸ்தோத்திரம் சொல்பவர்களின் பக்தியை பார்த்து, அந்த ஸ்தோத்திரங்களை ஏற்றுக் கொள்வாய். அவ்வாறு துதிக்கும் ஸ்வாயம்புவின் ஸ்தோத்திரங்களை ஏற்றுக்கொண்டு, அந்த மனுவை காத்தாய். கஜராஜனின் ஸ்தோத்திரத்தை ஏற்றுக்கொண்டு அவனை உடனடியாக காத்தவனே. 

164. ஸ்ரீ ஸர்கா3 நம:

பூ4மியல்லிருவ ஜனர 3ளி ஹோகு3வியோஸர்க3

நமோ ஜனோத்3தா4 காருண்ய லீலாவதார ஸ்ரீ

பி3ரம்மாண்ட3 ஸ்ருஜிஸி மோக் ஸாத3னக்கொத33லு

பூ4மி ஸஜ்ஜனரலி போகி3 விக்4னக3ள் நீகி3ஸுவி 

பூமியில் இருக்கும் மக்களிடம் சென்று அவர்களை காப்பவனே. ‘ஸர்கனே உனக்கு நமஸ்காரங்கள். மக்களை அருள்பவனே. கருணைக்கடலே. லீலைகளால் அவதாரம் செய்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. பிரம்மாண்டத்தை படைத்து, மோட்சத்திற்காக பல ஸாதனைகளை செய்வதற்காக, ஸஜ்ஜனர்களில் சென்று, அவர்களுக்கு வரும் தடைகளை அகற்றுபவனே.

***


No comments:

Post a Comment