ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
183. ஸ்ரீ ஸ்ரீமதே நம:
ஸ்ரீ எந்த3ரெ காந்தியு நீ ‘ஸ்ரீமான்’ நமோ நினகெ3
ஸ்ரீ ஞான ஜோதிர்மய நம்ம இந்த்3ரிய அதிக்ராந்த
ஸ்ரீ தி3வ்ய நித்ய சாமீகராப4ரண பூ4ஷிதனு
ஸ்ரீயுதனு நீனாது3த3ரிந்த3 ஸ்ரீமான் ஸ்ரீநிதி4யு
ஸ்ரீ என்றால் ஒளி. நீ ‘ஸ்ரீமான்’ உனக்கு என்
நமஸ்காரங்கள். ஞானமயனே. ஜோதிர்மயனே. நம் இந்திரியங்களில் வ்யாபித்திருப்பவனே. அழகானவனே.
தங்கமயமான ஆபரணங்களை தரித்தவனே. செல்வந்தனே. ஆகையாலேயே நீ ஸ்ரீமான் எனப்படுகிராய்.
உன்னிடம் அபாரமான நிதிகள் இருக்கின்றன.
184. ஸ்ரீ அமேயாத்மனே நம:
பரிச்சேத3ரஹித ஸ்வரூப ‘அமேயாத்ம’ நமோ
பரிமிதி இல்லவு கால தே3ஶ கு3ணாதீதனு
யாரூனு ஸாகல்யேன திளியலு அஶக்யனாத3
ஸ்வரூபனு நீனு அக3ணித மஹாமஹிமனு
எவ்வித குற்றம் குறைகள் அற்ற ஸ்வரூபம் கொண்டவனே. ‘அமேயாத்மனே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். எல்லைகள் அற்ற கால, தேச, குணங்களைக் கொண்டவனே. யாராலும் உன்னை முழுமையாக
அறிவதற்கு சாத்தியம் இல்லாத ஸ்வரூபம் கொண்டவன் நீ. எல்லைகள் அற்ற அபாரமான மகிமைகளைக்
கொண்டவனே.
185. ஸ்ரீ மஹாத்3ரித்4ருதே நம:
மஹா ஆத3ரணீய முக்2ய ப்ராணதா4ரக முக்2ய
ப்ராணன்ன ஸம்ரக்ஷிஸுவி நீ ‘மஹாத்3ரித்4ருக்’ நமோ
ப்3ருஹத்ஶைல மந்த3ரவ பெ3ன்னல்லி ஹொத்த ஸ்ரீகூர்ம
மஹாகோ3வர்த்த4ன பெட்டிந்தெ3த்திதி3 பா3லகிருஷ்ண
மிகச் சிறந்த மரியாதைகளைப் பெறுபவனே. முக்ய பிராணரை
தரித்திருப்பவனே. முக்யபிராணரை காப்பவனே. ‘மஹாத்ரித்ருக்’ உனக்கு என்
நமஸ்காரங்கள். மிகப்பெரிய மந்தர மலையை, தன் முதுகில் தாங்கிய ஸ்ரீகூர்மனே. மிகப்பெரிய
கோவர்த்தன மலையை, தன் விரலில் தாங்கிய பாலகிருஷ்ணனே.
***
No comments:
Post a Comment