ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
159. ஸ்ரீ அமோகா4ய நம:
ஸுப1லவில்லத3 கர்மவில்லத3 ‘அமோக4’ நமோ
ஸுப2ல ஸங்கல்பவுள்ள ஸதா3 நீனு ஸுபூர்ண
அபரிமித ப்ரபா4வ ஸத்ய ஜக3தா3தி3கர்த
கோ3பனிகெ3 ஒலிது3 புனர்னாகாதி3பத்யவித்த
நற்பலன்கள் இல்லாத, கர்மங்களே இல்லாத ‘அமோகனே’ உனக்கு நமஸ்காரங்கள். நற்பலன்களைக் கொடுப்பதாகவே சங்கல்பம் கொண்டுள்ள நீ, பூர்ணனாக இருக்கிறாய். அபாரமான சக்தியைக் கொண்டிருக்கிறாய். உலகம் அனைத்தையும் படைத்தவனே. (தவறுகளை செய்த) இந்திரனுக்கு அபயம் அளித்து, மறுபடி அவனுக்கு இந்திராதிபத்யத்தை அளித்தவனே.
160. ஸ்ரீ ஶுசயே நம:
ஸுக2 ஸ்வரூபதி3ம் வ்யாப்த ‘ஶுசியே’ நமோ நினகெ3
அகளங்க ஶு3த்3த4 நீ ஸம்பர்க்கதோ3ஷ நினகி3ல்ல
து3க்கி2யொளித்3த3ரு து3க்க2லேஶ நினக3ண்ட1து3
‘ஸம்யோக3 ப்ராப்திரிதி சேன்ன வைஶேஷ்யாத்’ நிர்தோ3ஷனு
ஸுக ஸ்வரூபமாக அனைத்து இடங்களிலும் வ்யாப்தமானவனே ‘ஶுசியே’ உனக்கு நமஸ்காரங்கள். களங்கங்கள் அற்றவனே. பவித்ரமானவனே. ஜீவர்களில் இருந்தாலும், அவர்களின் தோஷம் உன்னை அண்டுவதில்லை. துக்கப்படுபவர்களில் நீ இருந்தாலும், அந்த துக்கம் உன்னை சேர்வதில்லை. ‘ஸம்யோக..’ என்பதான பிரம்ம ஸூத்ரம் சொல்வதைப் போல, நீ தோஷங்கள் அற்றவன்.
161. ஸ்ரீ ஊர்ஜிதாய நம:
பரரிகெ3 உபடள கொடு3வ க்ரூர ப3லாட்4ய
ஶத்ருக3ள ஜயிஸுவ ‘ஊர்ஜிதனெ’ நமோ எம்பெ3
வராஹ நரஹரி மத்ஸ்ய பரஶுத4ர ராம
ஸ்ரீராமசந்திர மாத4வ கிருஷ்ண கல்க்யாதி3ரூப
பிறருக்கு தொந்தரவு கொடுக்கும் க்ருட அசுரர்களை, எதிரிகளை வெல்பவனே. ‘ஊர்ஜிதனே’ உனக்கு நமஸ்காரங்கள். வராகனே, நரஹரியே, மத்ஸ்யனே, பரஶு பிடித்த ராமனே, ஸ்ரீராமசந்திரனே, மாதவனே, கிருஷ்ணனே, கல்கி முதலான ரூபங்களை தரித்தவனே.
***
No comments:
Post a Comment