Monday, December 19, 2022

#58 - 156-157-158 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

156. ஸ்ரீ உபேந்தி3ராய நம:

புரந்த3ராதி3 பரிவார தே3வர்க3 ஸஹித

பரமைஶ்வர்யவந்தனாகி3உபேந்தி3நமஸ்தே

இந்த்3ஶப்33 அமுக்2யகெ3 தே3வராஜகெ3 இருத்தெ

இந்த்3ரனிகெ3 அனுஜனாகி3ருவுத3ரிம் உபேந்த்3 

இந்திராதி தேவர்களுடன் மிகச் செல்வந்தனாக இருப்பவனான ‘உபேந்திரனே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்திரன் என்னும் பெயர் முக்கியமாக உன்னையே குறிக்கிறது. அமுக்கியமாக (அடுத்ததாக) தேவேந்திரனை குறிக்கிறது. தேவேந்திரனுக்கு தம்பியாக இருப்பதால், நீ உபேந்திரன் ஆகிறாய். 

157. ஸ்ரீ வாமனாய நம:

அபீ4ஷ்டனேதாவாமனநமோ நினகெ3  ஸுந்த3

ஶுப4ரூப ஶத்ருக3ளன்ன தமஸ்ஸிகெ3 ஹோகி3ஸுவி

ஶுப4கர ஈப்ஸிதவ ஒதகி3ஸுவி ஸஜ்ஜனர்கெ3

ஶோப4 அன்னதா3தா ஒலிதி3 இந்த்3ரகு3 3லிகு3 

விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவனே வாமனனே. உனக்கு நமஸ்காரங்கள். அழகான, சுபமான ரூபத்தைக் கொண்டவனே. எதிரிகளை தமஸ்ஸிற்கு அனுப்புபவனே. பக்தர்களுக்கு நலனை தரக்கூடிய விருப்பங்களை நிறைவேற்றுபவனே. ஸஜ்ஜனர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனே. அன்னம் முதலானவற்றை கொடுப்பவனே. இந்திரன், பலி ஆகியோருக்கு அருளியவனே. 

158. ஸ்ரீ ப்ராம்ஶவே நம:

ஜக3த்தினலி வ்யாப்த நீப்ராம்ஶுநமோ நமோ எம்பெ3

ஜக3த்ஸர்வ பூ4மி தி3வி வ்யாபிஸித3 மஹாத்மவான்

த்ரிவிக்ரமனெ விஶ்வரூபனெ மஹோன்னதனு நீனு

ப்ரக்ருஷ்டதம விஷ்ணோ நினகெ3 ஸமோச்சரில்ல 

உலகம் முழுக்க வ்யாப்தனானவன் நீ. ‘ப்ராம்ஶுவே உனக்கு நமஸ்காரங்கள். பூமி, பாதாள, ஆகாஷ ஆகிய அனைத்து இடங்களிலும் வ்யாப்தனானவனே. மஹாத்மனே. த்ரிவிக்ரமனே. விஶ்வரூபனே. ஸர்வோத்தமனே. சிறந்தவனான விஷ்ணுவே உனக்கு சமமோ, அதிகமானவரோ யாரும் இல்லை.

***


No comments:

Post a Comment