ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
171. ஸ்ரீ வீரக்4னே நம:
வீரஶூர விதா4ரக ‘வீர:’ நமோ நினகெ3
வீர க்ரூர காம க்ரோதா3தி3க3ளன்னளிவி
வரவாயு த்3வேஷிக3ள நராத4ம து3ஷ்டரன்ன
ஹரிப4க்த த்3வேஷிக3ளன்ன த3ண்டி3ஸுவி ந்ருஸிம்ஹ
வீரர்களான அசுரர்களை வெல்பவனே. ‘வீரனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். க்ரூர வீரர்களான காம, க்ரோத ஆகிய (அரிஷட் வர்க்கங்களை) அழிப்பாயாக. வாயுதேவரின் த்வேஷிகளை, நரர்களில் அதமரான துஷ்டர்களை, ஹரிபக்த த்வேஷிகளை தண்டிப்பாயாக. நரசிம்மனே.
172. ஸ்ரீ மாத4வாய நம:
த4னத்3ரவ்யக3ள ப்ரவ்ருத்திஸுவ ‘மாத4வனெ’
ஆ நமோ ஞானாதி3 ஸம்பத்துக3ளித்து ஸலஹென்ன
பூர்ணஞானாத்மனே பூர்ணைஶ்வர்யாத்மா மாயாபதே
பூர்ண ஆனந்தா3த்மா ஆனந்த3த்வதிம் மாத4வ நீனே
தன, த்ரவியங்களை அருள்பவனான ‘மாதவனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். ஞானாதி செல்வங்களை அருளி என்னை காப்பாயாக. பூர்ண ஞானாத்மனே. பூர்ண ஐஸ்வர்யத்தைக் கொண்டவனே. மாயாதேவியின் பதியே. பூர்ண ஆனந்தாத்மனே. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனான, லட்சுமிதேவியின் பதி நீயே.
173. ஸ்ரீ மது4வே நம:
ஆனந்தா3னுப4வவந்த ஸுகரூப ‘மது4’ நமோ
ஆனந்த3வுள்ள ஆனந்தி3 நீனு கு3ணரூப ஐக்ய
நின்ன கு3ணக3ளிகு3 நினகு3 பே4த3 கிஞ்சித்து இல்ல
கு3ணகு3ணி அபே4த3 விஶேஷ எம்பு3த3ரிம் ஸித்3த4
ஆனந்த அனுபவத்தைக் கொண்டிருப்பவனே. ஸுகரூபனே. ‘மதுவே’ உனக்கு நமஸ்காரங்கள். ஆனந்தத்தைக் கொண்டிருப்பவன் நீயே. குணரூபமானவனே. உனக்கும் உன் குணங்களுக்கும் எவ்வித பேதங்களும் சிறிதும் இல்லை. ‘குணகுணி அபேத விசேஷ’ என்னும் வாக்கியம் இதனால் தெளிவாகிறது.
***
No comments:
Post a Comment