Tuesday, December 27, 2022

#66 - 180-181-182 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

180. ஸ்ரீ மஹாஶக்தியே நம:

மஹாஶக்தி ஸாமர்த்2யவந்தமஹாஶக்திநமோ

பி3ரம்ம ஶ்வேத3த்வீபதி3 கண்ட3 த்வச்சக்தி ரூபக3

பி3ரம்ம ருத்3ரரோள் தத்தத்ரூபதி3 இத்3து3 க்ருதி மாள்பி

மஹா நின்ன ஞானேச்சக்ரியாதி3 ஶக்திகெ3ணெயில்ல 

மஹாசக்தியை, மஹா சாமர்த்தியத்தைக் கொண்டவனே. ‘மஹாக்தியே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வேதத்வீபத்தில் பிரம்மன் கண்ட உன் ரூபங்களை, அதே பிரம்ம, ருத்ரர்களில் அந்தந்த ரூபங்களில் இருந்து அவரவர்கள் மூலமாக செயல்களை செய்கிறாய். உன்னுடைய மிகச்சிறந்த ஞான, இச்சா, க்ரியாதி சக்திகளுக்கு இணையே இல்லை. 

181. ஸ்ரீ மஹாத்3யுதயே நம:

மஹாப்ரஸாத3ரூபமஹாத்3யுதிநமோ நினகெ3

மஹாத்3யுதி நின்னிந்த3லேவெ ஸூர்ய ப்ரகாஶிஸுவ

தமேவபா4ந்தமனுபா4திஸர்வமிதி ஶ்ருதியு

மஹாவடு வ்யாஸ நாராயண பா4ர்க்க3 ந்ருஹரே 

மஹா பிரஸாதரூபமான ‘மஹாத்யுதியே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னாலேயே சூரியன் முதலானோரும் ஒளி வீசுகின்றனர். ‘தமேவாபாந்தமனுபாதி என்று ஸ்ருதியும் இதையே சொல்கிறது. வாமனனே. வ்யாஸனே. நாராயணனே. பார்க்கவனே. நரசிம்மனே. 

182. ஸ்ரீ அனிர்தே3ஷ்யவபுஷே நம:

பூர்ணவாகி3 திளியதே3 இஹ ஸ்வரூப நீ

அனிர்தே3ஷ்யவபுநமோ நினகி3ல்ல உபமான

ஆனந்த3 சின்மாத்ர அப்ராக்ருத வபு ஸ்தூ2லவல்ல

கு3ணத்ரய பௌ4திகவல்ல நின்னய ஶரீர 

முழுமையாக அறிய முடியாததான ஸ்வரூபத்தைக் கொண்டவன் நீ. ‘அனிர்தேஷ்யவபுவே உனக்கு என் நமஸ்காரங்கள். உனக்கு ஒப்புமை என யாருமே இல்லை. ஆனந்தமயனே. சின்மயனே. அப்ராக்ருத சரீரம் கொண்டவனே. ஸ்தூல சரீரம் இல்லாதவனே. உன் சரீரம் பௌதிகமானது அல்ல.

***


No comments:

Post a Comment