Friday, December 16, 2022

#55 - 147-148-149 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

147. ஸ்ரீ போ4ஜனாய நம:

ஸோமாதி3பானக்கெ ஆஹ்வான விஷயனாகி3ருவி

ஸுமஹார்ஹபோ4ஜனம்நாம நினகெ3 நமோ எம்பெ3

ரமே நின்னிந்த3 ஸர்வரு உபஜீவிதரோ ஸ்வாமி

வாமனனே அன்னதா3 இந்த்3ரப3லி ஸம்ரக்ஷக 

அமிர்தத்தை பகிர்ந்தளிப்பதற்கு வந்தவனே. ஸர்வோத்தமனே. ‘போஜனனே உனக்கு நமஸ்காரங்கள். ரமாதேவியின் தலைவனே. உன்னாலேயே அனைவரும் வாழ்கின்றனர். ஸ்வாமியே. வாமனனே. அன்னத்தைக் கொடுப்பவனே. இந்திரன், பலி ஆகியோரை காத்தவனே. 

148. ஸ்ரீ போ4க்த்ரே நம:

ஶத்ருஜனக3 4க்ஷகனெபோ4க்தாநமோ அத்தா

ஸர்வஸாரபோ4க்தா ஆத்மா அந்தராத்ம எந்தெ3னிபி

ஸர்வ ரஸத3லி நீனு ரஸரூபனாகி3ருவி

ஸ்வீகரிஸுவி ஸ்வாக்2 நின்ன ஆனந்த3 ரஸவன்னு 

துஷ்டர்களை (எதிரிகளை) வெல்பவனே. ‘போக்தனே உனக்கு நமஸ்காரங்கள். அனைத்து பொருட்களின் ஸாரங்களையும் உண்பவனே. ஆத்மா, அந்தராத்மா என்று அழைத்துக் கொள்பவனே. அனைத்து ரஸங்களிலும், நீ ரஸரூபனாக இருக்கிறாய். உன்னுடைய ஆனந்த ரஸமான, ஸ்வாக்ய ரஸத்தினை நீயே ஏற்றுக் கொள்கிறாய். 

149. ஸ்ரீ ஸஹிஷ்ணுவே நம:

ஶத்ருகள வேக3 தா3டி ஸஹன மாள்பஸஹிஷ்ணு

பதே3 பதே3 நமோ எம்பெ3 அஸம 3 அமித

4க்தஜன அபராத4 ஸஹன 3யதி3 மாள்பி

4க்தப3லி அபராத4 ஸஹிஸி காயுதிருவி 

எதிரிகளை (துஷ்டர்களை) வேகமாக அழிப்பவனே. ‘ஸஹிஷ்ணுவே உனக்கு நமஸ்காரங்கள். திரும்பத்திரும்ப உன்னை வணங்குகிறேன். எல்லையில்லா பலத்தினை கொண்டவனே. அனைத்து பக்தர்களின் தவறுகளையும் மன்னித்து, அவர்களை காப்பவனே. உன் பக்தனான பலியின் தவறுகளை பொறுத்துக் கொண்டு காக்கிறாய்.

***

No comments:

Post a Comment