Thursday, December 15, 2022

#54 - 144-145-146 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

144. ஸ்ரீ சதுர்த3ம்ஷ்ட்ராய நம:

ஸங்கல்ப நால்கர ஞானவந்தசதுர்த3ம்ஷ்ட்ரநமோ

ருகப நீ மனோபி4மான ஸுரரந்தஸ்த2ஶாஸ்த2

ஆகளங்க ஸுந்த3 ஸுலக்ஷண மஹாபுருஷ

ஸ்ரீகரத்வம் 3யயாமே போத4 ஸுதாரக ஞானம் 

நான்கு சங்கல்பமான தர்ம, அர்த்த, காம, மோட்சங்களின் ஞானத்தைக் கொண்டவனே, ‘சதுர்தம்ஷ்ட்ரனே உனக்கு நமஸ்காரங்கள். மனோபிமானியான ருத்ரர் முதலான தேவதைகளின் அந்தர்யாமியானவனே, தோஷங்கள் அற்றவனே, ஸுந்தரனே, ஸுலக்‌ஷணனே, மஹாபுருஷனே. 

145. ஸ்ரீ சதுர்பு4ஜாய நம:

சதுர்வித ஸம்ஸ்க்ருத ஸோம போ4க்தாசதுர்பு4ஜனே

ஸதா நமோ சதுர்வேதோ3த்34 ஞான போ43கனே

பது3மாரி கம்பு3 3தா3 சதுர்பு4 விராஜ நீ

வேத3ரக்ஷண ஞான ஶத்ரு நாஶனகர ஸ்வாமி 

காத்ய, பேய, போஜ்ய, லேஹ்ய என்பதான நான்கு வித பதார்த்தங்களின் ரஸத்தினை உண்பவனே; சதுர்புஜனே. ‘சதுர்புஜனே உனக்கு நமஸ்காரங்கள். நான்கு வேதங்கள் மூலமாக ஞானத்தை அளிப்பவனே. சங்கு, சக்ர, கதா, பத்ம ஆகிய ஆயுதங்கள் தாங்கிய தோள்களைக் கொண்டவனே, வேதங்கள் காப்பதான ஞானத்தை அழிப்பவர்களின் எதிரியே, ஸ்வாமியே. 

146. ஸ்ரீ ப்4ராஜிஷ்ணவே நம:

ப்ரகாஶன ஶீலனாகிருவப்4ராஜிஷ்ணவேநமோ

ஸ்வகாந்தியலி ஜ்வலிப வ்யாஸவாமன ந்ருஸிம்ஹ

பா4ர்க்க3வனே ஸூர்யதேஜ:புஞ்ச ஸ்ரீமன் நாராயண

ஜக3த்ஸ்ருஷ்ட சேஷ்டக ஸ்பூர்த்தித3 த்4யேய த்4யானிஸுவெ 

ஒளிபொருந்தியவனே. ‘ப்ராஜிஷ்ணவே உனக்கு நமஸ்காரங்கள். சொந்தமான ஒளியால் ஒளிர்பவனே. வ்யாஸனே, வாமனனே, ந்ருஸிம்ஹனே, பார்க்கவனே. சூரியனின் தேஜஸ்ஸினைக் கொண்டவனே. ஸ்ரீமன் நாராயணனே. ஜகத் ஸ்ருஷ்ட்யாதி அனைத்து செயல்களையும் செய்பவனே. தியானத்தால் அடையப்படுபவனே. உன்னை தியானம் செய்கிறேன்.

***


No comments:

Post a Comment