ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
165. ஸ்ரீ த்4ருதாத்மனே நம:
ப4க்தஜனக3ளு ஸாது4 யக்ஞ மாள்பத3கெ மன
ஸுத்3ருடீ4கரிஸி யக்ஞசரிஸலு உத்ஸாஹவ
இத்து ஒத3கு3வ ‘த்4ருதாத்ம’ நமோ நமோ நினகெ3
பூ4த ஸர்வக்காதா4ரனே நின்னலி மன நில்லிஸோ
பக்தர்கள் ஸாது யக்ஞங்களை செய்வதற்காக, அவர்களுக்கு
உற்சாகத்தை கொடுத்து அருளும் ‘த்ருதாத்மனே’ உனக்கு நமஸ்காரங்கள். அனைத்து பூதங்களுக்கும்
ஆதாரமானவனே. உன்னிடம் என் மனதை நிலைநிறுத்துவாயாக.
166. ஸ்ரீ நியமாய நம:
ஸ்வவிஷய ஞானிய மன மாள்ப நியமனே
ஸர்வதா3 நமோ நினகெ3 ப்ராணி ‘நியமன’ கர்தா
ஸர்வ ப்ராணிக3ள ஸர்வஸத்தாப்ரமிதி ப்ரவ்ருத்தி
ஸர்வேஶ நின்னதீ4னவு ஞான ப்ராபக ஸர்வக்3ஞ
ஞானியின் மனதினை உன் விஷயமாக திருப்புபவனே ‘நியமனே’ உனக்கு எப்போதும்
என் நமஸ்காரங்கள். ப்ராணிகளை நியமனம் செய்பவனே. அனைத்து பிராணிகளின் அனைத்து உற்பத்தி
முதலானவற்றை செய்பவனே. ஸர்வேஶனே. அனைத்தும் உன் அதீனமே.
ஞானத்தை கொடுப்பவனே. ஸர்வக்ஞனே.
167. ஸ்ரீ யமாய நம:
ஞானி ரிஷிக்ருத ஸ்தோத்ர கேளி ஸ்வீகரிஸுவியோ
ஞானமய ‘யம’ நமோ ஸ்வீகரிஸோ ஈ நுடிக3ள
நீ நியமன மாள்புத3ரிந்த3 யம எந்தெனிபி3
நின்ன ஸார்வக்ஞத்வதி3ம் ஸர்வவ திளித3 நியந்த
ஞானிகள், ரிஷிகள் செய்யும் ஸ்தோத்திரங்களைக் கேட்டு
அவற்றை ஏற்றுக் கொள்பவனே. ஞானமயமானவனே. ‘யமனே’ உனக்கு நமஸ்காரங்கள். இந்த என் நுடிகளை
ஏற்றுக் கொள்வாயாக. அனைத்தையும் நீ நியமனம் செய்வதால், யம என்று அழைத்துக் கொள்கிறாய்.
உன்னுடைய ஸார்வக்ஞத்தினால் அனைத்தையும் அறிந்தவனே. அனைத்தையும் நடத்துபவனே.
***
No comments:
Post a Comment