ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
129. ஸ்ரீ பா4னுவே நம:
நின்ன ப4க்தருக3ள விஷயேச்சாஸுளிக3ளன்ன
நீனு பரிஹரிஸுவி ‘பா4னு’ நமஸ்தே நமஸ்தே
ஞானதூ3ர மாள்ப பா3த4க இச்சா தூ3ரமாடி3
ஞான ப்ரகாஶவ ஒத3கி3ஸுவி ஸர்வக்ஞ ஸூர்ய
உன் பக்தர்களின் விஷய ஆசைகள் அனைத்தையும் நீ பரிகரிக்கிறாய். ‘பானுவே’ உனக்கு நமஸ்காரங்கள். உத்தம ஞானத்தை விலக்குவதான, கெட்ட ஆசைகளை விலக்கி, ஞானத்தை கொடுத்து அருள்கிறாய். ஸர்வக்ஞனே. சூரியனே.
130. ஸ்ரீ விஷ்வக்ஸேனாய நம:
ப4க்தர்க3ளு போ4க3 மாட3லிகெ தத் தத் யோக்3யவாத3
போ4க்3ய லோகக3ளல்லி அவருக3ள க3மனாதி3
ஒத3கி3ஸுவ ‘விஷ்வக்ஸேன’ நினகெ3 நமோ எம்பெ3
முக்தரிகெ3 ஆஶ்ரயனு ரக்ஷகனு போ4க3ப்ரத3னு
பக்தர்கள் அனுபவிப்பதற்கு, அவரவர்களுக்கு தகுதியான போக உலகங்களில் அவர்களை வரவழைக்கிறாயே. ‘விஷ்வக்ஸேனனே’ உனக்கு நமஸ்காரங்கள். முக்தர்களின் கதி நீயே. அவர்களை காப்பவன். அவர்களுக்கு போகங்களை அருள்பவன்.
131. ஸ்ரீ ஜனார்த்3த4னாய நம:
ஜனன நாஶன மாள்ப ‘ஜனார்த்3த4ன’ நமோ நமோ
ஞானிக3ள ஸம்ஸார ப3ந்த4னக3ள பி3டி3ஸுவி
‘ஸஹாயதே ஜனோsர்த்த3யதி3 ஸம்ஸார நிமித்யர்த்3த4ன:’
ஞானிஜன ப்ராப்யனாகி3 இருதியோ ஜனார்த்3த4ன
பிறப்பினை அழிக்கும் ஜனார்த்தனனே உனக்கு நமஸ்காரங்கள். ஞானிகளின் சம்சார பந்தனங்களை விடுவிக்கிறாய். ‘ஸஹாயதே...’ என்னும் வாக்கியத்திற்கேற்ப, ஸஜ்ஜனர்களுக்கு சம்சார பந்தனத்தை விலக்கி, மோட்சத்தை கொடுக்கிறாய். ஞானிகளால் அடையப்படுபவனே. ஜனார்த்தனனே.
***
No comments:
Post a Comment