Tuesday, December 13, 2022

#52 - 138-139-140 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

138. ஸ்ரீ லோகாத்யக்ஷாய நம:

லோகக3 ஸமஸ்தாதி4கார வஹிஸிருவி நீ

லோகாத்3யக்நமோ ஸர்வ ப்ராணிக3 ஸார்வபௌ4

ஸ்ரீபூ4 கமலாஸன உமேஷாதி3 ஸர்வரிகு3

ஆகா சந்த்3ரார்க்காதி33 பா4ஸக ஶாஸகனு 

உலகின் மொத்த அதிகாரங்களையும் நீ தாங்குகிறாய். ‘லோகாத்யக்‌ஷனே உனக்கு நமஸ்காரங்கள். அனைத்து பிராணிகளைவிடவும் உத்தமன். ஸ்ரீலட்சுமிதேவி, பூதேவி, பிரம்மா, ருத்ர ஆகிய அனைவருக்கும் தலைவன். ஆகாய, சந்திர, சூரியன் ஆகியோருக்கு ஒளி கொடுப்பவன். அவர்களை ஆள்பவன். 

139. ஸ்ரீ ஸுராத்4யக்ஷாய நம:

ஸுரரிகெ3 அதி4 கு3 வ்யஞ்சகனாகி3ருவி

ஸுராத்4யக்நமோ நினகெ3 ஸுரர ஸார்வபௌ4

ஸுர எனிப வரவாயு அந்தர் நியாமகனே

பரமபுருஷ பூர்ணைஶ்வர்ய பரமாத்மா  

ஸஜ்ஜனர்களுக்கு அதிக நற்குணங்களை கொடுப்பவனாக இருக்கிறாய். ‘ஸுராத்யக்‌ஷனே உனக்கு நமஸ்காரங்கள். தேவர்களின் தலைவனே. வாயுதேவரின் அந்தர்யாமியே. பரமபுருஷனே. முழுமையான ஐஸ்வர்யங்களைக் கொண்டவனே. பரமாத்மனே. ஈஶனே. 

140. ஸ்ரீ 4ர்மாத்4யக்ஷாய நம:

ரக்ஷிஸுவ 4ர்மஸாத4னத3 அபி4வ்யஞ்சகனு

4ர்மாத்4யக்நமோ ஸத்34ர்ம அதி4காரிக3ளு

தம்ம ரக்ஷாஸாத4 கெ3ய்து3 ஒத3கி3 2லவீவி

4ர்மாத்4யக் 4ர்மஸ்த2 அத்3யக் ஸ்வாமி தா4ரகனே 

அனைவரையும் காப்பாற்றும் தர்மத்தை, அதற்கான ஸாதனங்களை அருள்பவன். ‘தர்மாத்யக்‌ஷனே உனக்கு நமஸ்காரங்கள். ஸத்கர்மங்களை செய்யும் அதிகாரிகளுக்கு, தரிசனம் அளித்து, தக்க பலன்களைக் கொடுப்பவனே. தர்மங்களில் இருப்பவனே. தலைவனே. ஸ்வாமியே. அனைத்தையும் தாங்கியிருப்பவனே.

***


No comments:

Post a Comment