Wednesday, December 14, 2022

#53 - 141-142-143 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

141. ஸ்ரீ க்ருதாக்ருதயே நம:

ஸாது4கு3ரு ஶிக்ஷிதரிகெ3 அபீ4ஷ்ட பூரெயிஸலு

ஒத3கு3விக்ருதாக்ருதயேரணு ரணெம்பெ3

ஸாது4 போ3தி4 ஞானதி3ம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி கர்ம

ஸத்34ர்ம நிஷ்டெ தக்க ஐஹிகாமுஷ்மிகா 2லத3 

ஸாதுகளுக்கு, குருகளுக்கு, கற்றறிந்த அறிஞர்களுக்கு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற தரிசனம் அளிக்கிறாய். ‘க்ருதாக்ருதயே உனக்கு நமஸ்காரங்கள். உன்னை சரணடைந்தேன். குருவானவர் போதித்த ஞானத்தினால் செய்த ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி கர்மங்களுக்கு, செய்த தர்மங்களுக்கு ஏற்ப, ஐஹிக, ஆமுஷ்மிக பலன்களை கொடுப்பவனே. 

142. ஸ்ரீ சதுராத்மனே நம:

ஸத்ப4க்தரிகெ3 தீ4ர்க்கா4யுர்தா3சதுராத்மநமோ

எம்பெ3 நா பா3கி3ஶிர ஸூர்யமண்ட3 மத்4யவர்த்தி

ஸ்ரீப ஆத்மா அந்தராத்ம பரமாத்ம ஞானாத்மா

ஸ்ரீப்3ருஹதீ ஸஹஸ்ர ஸ்வர வ்யஞ்சனாக்ஷர வாச்ய 

ஸத்பக்தர்களுக்கு தீர்க்க ஆயுளைக் கொடுப்பவனே. ‘சதுராத்மனே உனக்கு தலைவணங்கி நமஸ்காரங்கள் செய்கிறேன். சூர்யமண்டலத்தில் இருப்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. ஆத்மனே. அந்தராத்மனே. பரமாத்மனே. ஞானாத்மனே. ஸ்ரீப்ருஹதி ஸஹஸ்ரத்தின் ஸ்வரத்தில், எழுத்துகளால் அறியப்படுபவனே. 

143. ஸ்ரீ சதுர்வ்யூஹாய நம:

சது:புருஷார்த்த23 ஈவசதுர்வ்யூஹாயநமோ

ஸ்ரீத3 வாஸுதே3 ஸங்கர்ஷண ப்ரத்3யும்னானிருத்34

முக்திகாமார்த்த2 4ர்ம துர்ய ஸுப்தி ஸ்வப்ன ஜாக்3ருதி

இந்த2 நால்கு ப்ராபக வ்யூஹக3ளு சதுர்க3தியெ 

தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கு வித பல புருஷார்த்தங்களை அளிப்பவனே. ‘சதுர்வ்யூஹனே உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. வாஸுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் நான்கு ரூபங்களை தரித்தவனே. தர்ம, அர்த்த, காம, மோட்சங்களை கொடுப்பவனே. தூக்கம், கனவு, முழிப்பு, அபரோக்‌ஷ அனுபவம் (துரிய) ஆகிய அனுபவங்களை (நிலைகளை) அருள்பவனே.

***


No comments:

Post a Comment