ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
168. ஸ்ரீ வேத்3யாய நம:
ஸ்துதிரூப வேஷதொ3ளு ராஜிஸுவ ‘வேத்3ய’ நமோ
வேத3த3லி பரிமாண பா4வ ரூப கு3ண கர்ம
ஸ்துத்ய ஆது3த3ரிந்த3 ஸதா3க3மதி3 வேத்3ய நின்ன
ப4க்தியிந்து3பாஸிஸுவரிகெ3 அபரோக்ஷ வீவி
துதிப்பதற்கு உண்டான வேடத்தை தாங்கி நிற்பவனே. ‘வேத்யனே’ உனக்கு நமஸ்காரங்கள்.
வேதங்களில் உன்னுடைய பாவ, ரூப, குண, கர்மங்கள் போற்றப்பட்டுள்ளன. ஆகையால், அனைத்து
வேதங்களாலும் உன்னை வணங்குபவர்களுக்கு, நீ பக்தியை அருளி, மோட்சத்தையும் கொடுக்கிறாய்.
169. ஸ்ரீ வைத்3யாய நம:
ரோக3வ ‘வைத்3ய’ பரிஹார மாடு3வ தெரத3ல்லி
ரோக3க3ள பரிஹரிப வைத்3ய நமோ நமஸ்தே
ஆக3மோதி3த வித்3யாத்வத்பர ஸம்ப3ந்த4தி3ம் வைத்3ய
ஶோக1ஹர ஆயுராரோக்3யதா3 ப4வரோக3 வைத்3ய
நோய்களை பரிகரிக்கும் மருத்துவரைப் போல, பவ ரோகத்தை
பரிகரிக்கும் ‘வைத்யனே’
உனக்கு நமஸ்காரங்கள். ஆகமங்கள் சொல்வதான விதங்களில் வைத்யனாக இருப்பவனே.
சோகங்களை பரிகரிப்பவனே. ஆயுர், ஆரோக்யங்களை கொடுப்பவனே. பவரோகத்தை பரிகரிப்பவனே.
170. ஸ்ரீ ஸதா3யோகி3னே நம:
ஶத்ருக3ள ஸம்யோக3 மாடு3வி ஸமரத3ல்லி நீ
‘ஸதா3யோகி3’ நமோ என்ன ஶத்ருக3ள ஸம்ஹரிஸி
ஸாது3 ப4க்த்யாதி3 ஸாத4னகெ3ய்ஸி ஸுப்ரஸன்னனாகோ3
வேத3மய ஸ்ரீனிவாஸ ஸ்ரீராம த3த்த கபில
எதிரிகளை போரில் வெல்பவனே ‘ஸதாயோகியே’ உனக்கு என்
நமஸ்காரங்கள். என் எதிரிகளை அழித்து, பக்தி வருவதற்கான ஸாதனைகளை செய்வித்து, அதன் மூலம்
மகிழ்ச்சி அடைவாயாக. வேதங்களில் நிறைந்தவனே. ஸ்ரீனிவாஸனே. ஸ்ரீராமனே. தத்தனே. கபிலனே.
***
No comments:
Post a Comment