Monday, December 12, 2022

#51 - 135-136-137 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

135. ஸ்ரீ வேதா3ங்கா3 நம:

ஞான ஒத3கி3ஸுவி நீவேதா3ங்க3நமோ நினகெ3

ஞான புஞ்ஜவு வேத3 வேத3ஸ்த2 நீனு வேத3வேத்3

2ந்த3ஸ்ஸுக3ள் உபஶாகா2தி3 அங்க3யுத வேத3தி3ந்த3

ஞானலபி4புது3 ஞானப்ராபக ரமே நீனு 

ஞானத்தை அருள்பவனே ‘வேதாங்கனே உனக்கு நமஸ்காரங்கள். ஞானத்தின் இருப்பிடமே. வேதங்களில் இருப்பவனே. வேதங்களால் போற்றப்படுபவனே. சந்தஸ், உபஷாகை ஆகியவற்றை அங்கமாக கொண்டிருக்கும் வேதங்களால் ஞானத்தை அருள்பவனே. ரமாதேவியின் ஈசனே. 

136. ஸ்ரீ வேத3விதே3 நம:

4க்தரிகெ3 தாவு மாள்ப ஸ்தோத்ரதி3ந்த3 லப்34னாகு3

வந்தவேத3வித்நமோ வேத34ர்மானுஷ்டான அங்க3

ஸ்தோத்ராதி33ளிகெ3 ஒலியுத வேத்3யனாகு3வி நீ

பது3மாஸனாதி3 ஸுரப4க்த ஜனரிகெ3 வேத்3 

தாம் செய்யும் ஸ்தோத்திரங்களால் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து அருள்பவனே ‘வேதவித் உனக்கு நமஸ்காரங்கள். வேதங்களுக்கு, அனுஷ்டானங்களுக்கு, அதன் அங்கமான ஸ்தோத்திரங்களுக்கு மகிழ்ந்து தரிசனம் அளிப்பவனே. நீ வேதங்களால் புகழப்படுகிறாய். தியானம் செய்யும் பக்தர்களுக்கு நீ தெரிகிறாய். 

137. ஸ்ரீ கவயே நம:

4க்தருக3ளிகெ3 ஸுக2 ஸ்வரூப ஒத3கி3ஸுவவனு

மோத3மயகவிநமோ ஞானிக3ளிந்த3 ஸம்ஸ்துத்ய

ஐவத்து மேலொந்து3 வர்ணத3 மஹைஶ்வர்ய ஸ்ரேஷ்டனு

தடித்தாரா சந்த்3ரார்க்க வித்3யுத்காந்தி நிப4 ஹொளெவி 

பக்தர்களுக்கு சுக ஸ்வரூபத்தை அளிக்கிறாய். மகிழ்ச்சிகரமானவன். ‘கவியே உனக்கு நமஸ்காரங்கள். ஞானிகளால் வணங்கப்படுகிறாய். 51 வர்ணங்களால் (எழுத்துக்களால்) போற்றப்படுபவன். சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவர்களில் நீ இருந்து, அவர்களுக்கு ஒளியைக் கொடுக்கிறாய்.

***


No comments:

Post a Comment