ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
153. ஸ்ரீ ஜேத்ரே நம:
அதித்3வேஷி ரிபுக3ள ஜயிஸுவ ‘ஜேதா’ நமோ
பூ4தனயன்ன ஜயிஸி கன்யெயர காய்தி கிருஷ்ண
மது4கைடபர அளிதி3 வேதோ3த்3த4ர ஹயாஸ்ய
போ4திஸி ஜினன்ன ஜயிஸிதி3 ஸுரபக்ஷ பு3த்3தி4
அதிகமான த்வேஷம் கொண்ட எதிரிகளை வெல்பவனான ‘ஜேதா’ உனக்கு நமஸ்காரங்கள். பூமாதேவியின் மகனான நரகாசுரனைக் கொன்று, அவனின் சிறையில் இருந்த கன்யையர்களை காத்தவனே கிருஷ்ணனே. மதுகைடப அசுரர்களைக் கொன்றாய். வேதங்களை காத்தவனே. ஹயக்ரீவனே. ஜினனுக்கு போதித்து, தேவதைகளுக்கு நற்புத்தி புகட்டினாயே.
154. ஸ்ரீ விஶ்வயோனயே நம:
ஸர்வாஶ்ரயனே ‘விஶ்வயோனி’ நமோ நமோ நினகெ3
ஸர்வத்யஸ்தலிங்க3 ஸலிங்க3 தே3ஹி ஜீவருக3ள
ஸர்வரன்ன உத3ரத3ல்லிட்டுக்கொண்டு3 தருவாய
விஶ்வஜக3த் ஸ்ருஷ்டியனு மாள்பி நீ ஸ்ருஷ்ட்யாதி3 கர்த்த
அனைவரின் கதியே. ‘விஶ்வயோனியே’ உனக்கு நமஸ்காரங்கள். லிங்க தேகம் விட்டவர்களை (முக்த ஜீவிகளை), லிங்க தேகம் கொண்டுள்ள ஜீவர்களை என அனைவரையும் உன் வயிற்றில் வைத்துக்கொண்டு, பிறகு, ஸ்ருஷ்டி காலம் வரும்போது, ஸ்ருஷ்டி முதலான அனைத்து செயல்களையும் செய்பவனே.
155. ஸ்ரீ புனர்வஸவே நம:
புன: புன: த4ன த்3ரவ்ய ஈவ ‘புனர்வஸு’ நமோ
த4னவீவி கஸகொம்பி3 புன: 4தனவன்னு ஈவி
த4னமத3தி3ம் ஹரிய மரெயத3வகெ புன:
நீ த4னகொடு3வி பா4க3வதாஷ்டமதி3 ஹேளித்3தி3
(பக்தர்களுக்கு) திரும்பத்திரும்ப தன, திரவியங்களை கொடுப்பவனான ‘புனர்வஸுவே’ உனக்கு நமஸ்காரங்கள். செல்வங்களை கொடுப்பவனே. பாவங்களை போக்குபவனே. மறுபடி செல்வத்தைக் கொடுத்து, அந்த செல்வத்தின் கர்வத்தால், ஸ்ரீஹரியை மறக்காதவர்களுக்கு, மறுபடி நீ செல்வத்தைக் கொடுக்கிறாய். பாகவத 8ம் ஸ்கந்தத்தில் சொல்லிபடி இவ்வாறு செய்கிறாய்.
***
No comments:
Post a Comment