ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
132. ஸ்ரீ வேதா3ய நம:
ஸ்தோத்ர ரூபவாகி3ஹவு ப4க்தர்க3ள வாக்யக3ளு
அந்த2வாக்ய ஸ்வீகரிஸி ஸ்ரவண மாடு3வி நீனு
‘வேத3’ நமோ நமோ நினகெ3 ஈ ஸ்தோத்ர ஸ்வீகரிஸோ
வேத3க3ம்யனே ஞானபோ3த4 வேத3வ்யாஸ கபில
ஸ்தோத்ர ரூபமான பக்தர்களின் வாக்கியங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றை கேட்கிறாய். ‘வேதனே’ உனக்கு நமஸ்காரங்கள். இந்த ஸ்தோத்திரத்தையும் ஏற்றுக் கொள்வாயாக. வேதங்களால் போற்றப்படுபவனே. அபாரமான ஞானத்தைக் கொண்டவனே. வேதவ்யாஸனே. கபிலனே.
133. ஸ்ரீ வேத3விதே3 நம:
ஸாது4 ஸாத4ன தொரெது3 வ்யர்த்த2 மாடு3வவரிகெ3
நிந்த்3ய ஆயுஷ்ய கொடு3வ ‘வேத3வித்’ நமோ நமஸ்தே
மாத4வ நீ என்னலி நிந்து நின்ன ப்ரீதிஸாத4ன
ஸதா3கெ3யிஸோ வேத3 ஸர்வவ அரித வேத3வ்யாஸ
சரியான வழிகளை விட்டு, (வாழ்க்கையை) வீண் ஆக்குபவர்களுக்கு, (அனைவரும்) திட்டுவதான ஆயுளைக் கொடுப்பவனே ‘வேதவித்’ உனக்கு என் நமஸ்காரங்கள். மாதவனே. நீ என்னில் நின்று, உனக்கு மகிழ்ச்சி கொடுக்கும்படியான ஸாதனைகளை எப்போதும் செய்விப்பாயாக. வேதங்கள் அனைத்தையும் அறிந்த வேதவ்யாஸனே.
134. ஸ்ரீ அவ்யங்கா3ய நம:
பி3ட3தெ3 ஸதா3 ப3லு ஸாது4 பரிவாரதி3ந்த3 நீ
ஒட3கூ3டி3 இருவவ ‘அவ்யங்க3னே’ நமோ நம:
கட3லஷயனனே நீனு ஸூர்யாதி3 பரிவார
ஒட3கூ3டி3 தத்தத் ஆஶ்ரயனு ஆகி3 இருவியோ
எப்போதும் / விட்டுவிடாமல் நீ ஸாது ஸஜ்ஜனர்களின் குழுவினருடனேயே இருக்கிறாய் ‘அவ்யங்கனே’ உனக்கு நமஸ்காரங்கள். பாற்கடலில் படுத்திருப்பவனே. சூரியன் முதலான அனைவரின் கதியாகவும் இருக்கிறாயே.
****
No comments:
Post a Comment