Monday, November 28, 2022

#48 - 126-127-128 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***   

126. ஸ்ரீ மஹாதபஸே நம:

மஹாஸமர்த்த2 ஸம்பூர்ண நீமஹாதபஸே

அஹர்நிஶி ஶரணாதெ3 மாம்பாஹி ஸர்வக்ஞ 43வன்

மஹார்ஹ நீ ஸுகக்ஞான 3லரூப ஹயமுக2

மஹிதா3 ஸ்ரீஹரே கிருஷ்ண வேத3வ்யாஸ கபில 

அபாரமான சாமர்த்தியம் கொண்டவன் நீ. மஹாதபஸே உனக்கு என் நமஸ்காரங்கள். இரவும் பகலுமாக உன்னிடம் நான் சரணடைந்தேன். என்னை காப்பாயாக. ஸர்வக்ஞனே. பகவந்தனே. நீ சுக ஞான பல ரூபனாக இருக்கிறாய். ஹயக்ரீவனே. மஹிதாஸனே. ஸ்ரீஹரியே. கிருஷ்ணனே. வேதவ்யாஸனே. கபிலனே. 

127. ஸ்ரீ ஸர்வகா3 நம:

ஸர்வ ஜீவாந்தஸ்யஸர்வக3னேஸ்வாமி நமோ எம்பெ3

ஸர்வ நியாமக ஸர்வவனு திளித3வனு நீ

ஸர்வஸ்தா2னாகி3 வேதா3ந்த ஸூக்ததி3 உக்த

ஸர்வத்ர ப்ரஸித்3தோ3பதே3ஶாத் எந்து3 ஸ்ரீ விஷ்ணு 

அனைத்து ஜீவர்களிலும் இருப்பவனே. ஸர்வகனே. ஸ்வாமியே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்தையும் நடத்துபவன் நீயே. அனைத்தையும் அறிந்தவன் நீயே. அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறாய். அனைவருக்கும் தலைவனே. வேதாந்த ஸூக்தமான பிரம்ம ஸூத்ரத்தில் - ஸர்வத்ர ப்ரஸித்த அதிகரணத்தில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீவிஷ்ணுவே. 

128. ஸ்ரீ ஸர்வவிதே3 நம:

தா3த்ருத்வாதி3 ஸத்3ருஷ 4ர்மலாப4 ஒத3கி3ஸுவி

ஸர்வவித்நமோ நினகெ3 ஸர்வக்ஞ ஞானப்ரதா3

ஸர்வவதிளித3 நின்ன திளிவ ஞானலாப4வீயோ

ஸர்வோத்பாத3 ஸர்வக3 ஸர்வத்ர வேத்3  

கருணை முதலான குணங்களால் தரிசனம் அளித்து, பலன்களைக் கொடுப்பவனே. ‘ஸர்வவித் உனக்கு நமஸ்காரங்கள். ஸர்வக்ஞனே. ஞானத்தை அளிப்பவனே. அனைத்தையும் அறிந்தவனே. உன்னை அறியும் ஞான லாபத்தை அளிப்பாயாக. அனைத்தையும் படைப்பவனே. அனைத்து இடங்களிலும் வ்யாப்தனே. அனைத்து இடங்களிலும் / அனைவராலும் புகழப்படுபவனே. ஈனே.

***



No comments:

Post a Comment