Tuesday, November 15, 2022

#35 - 87-88-89 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

87. ஸ்ரீ ஆத்மவதே நம:

ஜனன மரண ஸம்ஸாரதி3ம் முக்தராகெ3 யோக்3

ஸுமனஸரே ப்4ருத்யராகி3 உள்ள ஆத்மவான் நமோ

அனக4 அப்ராக்ருத ஸம்ஸார ரஹிதவு நித்ய

ஆனந்த3 சின்மாத்ரவவு நீனு ப்4ருத்யமோக்ஷத3னு 

ஜனன, மரண, ஸம்ஸார ஆகியவை இல்லாத, யோக்ய ஜீவிகளே நண்பராக உள்ள ‘ஆத்மவான் உனக்கு நமஸ்காரங்கள். தோஷங்கள் அற்றவனே, அப்ராக்ருத சரீரம் கொண்டவனே. சம்சார துக்கங்கள் இல்லாதவனே. நித்யானந்தனே. சின்மயனே. உன் பக்தர்களுக்கு மோட்சத்தை அளிப்பவனே. 

88. ஸ்ரீ ஸுரேஶாய நம:

சித் அசித் ஸர்வஜீவ ஜட33ளிகு3 ஸ்வாமியு

ஆத3ஸுரேஶனேநமோ நமோ எம்பெ3னு நினகெ3

தீ3ப்திமான்க3ளு ஸுரரு ஸுரதே3வர்க3 ஸ்வாமி

ஸம்பூர்ணர ஆனந்த3 ஶன ஶீலஸ்வாமி 

சராசரமான அனைத்து ஜட, ஜீவர்களுக்கும் ஸ்வாமியே. ‘ஸுரேனே உனக்கு நமஸ்காரங்கள். தேவதைகள், தேவர்களின் ஸ்வாமியே. ஆனந்தமயனே. ஈனே. தேவர்களின் ஸ்வாமியே. 

89. ஸ்ரீ ஶரணாய நம:

ஸரஸிஜோத்34வாதி33 ரக்ஷிஸுவி ஶரணு

ஶரணு நமோஶம்ஸுகம்ஶாந்த ஸம்வித3 நின்னல்லி

ரதரு 4க்தரிகெ3ணம்ஸுகரக்ஷணெ சேஷ்டா

ஆஸ்ரய நீனு ஸுரேஶ்வர அப4யப்ரதா3 

பிரம்மன் முதலான அனைவர்களையும் காக்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். ‘ம் - சுக, ஶாந்த ஸ்வரூபனே; உன்னில் ‘ர பக்தி கொண்டிருக்கும் பக்தர்களுக்கு; ‘ணம் சுகங்களை, கதியினை கொடுப்பவன் நீயே. ஸுரேஶ்வரனே. அபயம் அளிப்பவனே.

***


No comments:

Post a Comment