Wednesday, November 16, 2022

#36 - 90-91-92 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

90. ஸ்ரீ ஶர்மணே நம:

சித்ர வித4 வித4 ஸுக2ங்களுத்பாத3கனெஶர்ம

ஸதத நமோ நமோ ஶுப43 நீ களிவி

எந்தா2 தோ3ஶவு இல்லத3ந்த2 ஸம்பூர்ணவாத ஞானா

நந்த3மய நீ 4க்தர்கெ3 ஸுகா2னுப4 கல்பக1 

பற்பல விதமான விசித்ர சுகங்களை உருவாக்குபவனே; ‘ர்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். அஶுபங்களை நீ போக்குகிறாய். எவ்வித தோஷங்களும் அற்றதான முழுமையான ஞானானந்தமயன் நீ; பக்தர்களுக்கு சுகானுபவத்தை கொடுப்பவன் நீ. 

91. ஸ்ரீ விஶ்வரேதஸே நம:

வேத3வாக்யகளெல்லதி3ந்த3லி ப்ரதிபாத்3 நீனு

விஶ்வரேதாஹ்வயனேநமோ மஹாபுருஷ பூர்ண

பாதோ3ஸ்ய விஶ்வாபூ4தானிநீனு ஜக3த்காரணனு

வாததே3வன ஜனக நினகெ3 ஶரணெம்பெ3னு 

வேத வாக்கியங்கள் அனைத்தாலும் போற்றப்படுபவன் நீ. ‘விஶ்வரேதாஹ்வயனே உனக்கு என் நமஸ்காரங்கள். மஹாபுருஷனே. பூர்ணனே. ‘பாதோஸ்ய விஶ்வாபூதானி என்னும் வேத மந்திரம்  உன்னை புகழ்கிறது. நீயே ஜகத்காரணன். பிரம்மதேவனின் தந்தையே. உன்னை நான் வணங்குகிறேன். 

92. ஸ்ரீ ப்ரஜாப4வாய நம:

விமல 3ஹுஸாத4னவ மெச்சி பே3காத்3தீ3ப்ஸித

அம்ருதோபமதி3 கரெவி 4க்தர்கெ3ப்ரஜாப4

நமோ காமத3னெ அர்ப்பிபப்ரஜெய 4க்தியந்தெ

ஸ்ரீ மனோஹர நீ ஈவி 2லவ ப்ரஜாஜனக 

பக்தர்களின் ஸாதனைகளுக்கு மிகவும் மகிழ்ந்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் பொழிகிறாய். ‘ப்ரஜாபவனே உனக்கு நமஸ்காரங்கள். பக்தர்களின் பக்திக்கேற்ப அனைத்தையும் அருள்பவனே. ஸ்ரீமனோகரனே. பலன்களை நீ தருகிராய். அனைவரின் தந்தையே.

***


No comments:

Post a Comment