Monday, November 7, 2022

#27 - 63-64-65 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

63. ஸ்ரீ த்ரிககுத்3தா4மனே நம:

ஆத்4யாத்மிக ஆதி4 தெ3ய்விக ஆதி4 பௌ4திக தாப

குத்ஸிதவாகி3 மாள்பத்ரிககுத்3தா4மனேநமஸ்தே

ஜ்யோதி: த்ரிபாத்3தி3: பர ஆதி3வராஹஸுரூப

த்ரிககுத் எரடு3 பு4 கந்த3மூல விக்2யாத 

ஆத்யாத்மிக, ஆதி தெய்விக, ஆதி பௌதிக என்பதான மூன்று வித தாபங்களை பரிகரிப்பவனே. ‘த்ரிககுத்தாமனே உனக்கு நமஸ்காரங்கள். ஆதி வராக ஸ்வரூபனே. ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று உலகங்களிலும் இருப்பவனே. இரு தோள்களைக் கொண்டவனே. அனைத்திற்கும் வேர் ஆனவனே. 

64. ஸ்ரீ பவித்ராய நம:

பாபவில்லத3வனாகி3 இருவபவித்ரம்நமோ

பாபாதி3 கர்மவில்லத3 நீனு சக்ரதா4ரியு

பாப பர்வத பக் கடி3 குலிஶனு நீனு

ஸ்ரீ புண்டரீகாக் யோக்3யப4க்தர பாபனகர்த்தா 

பாவங்கள் இல்லாதவனே. ‘பவித்ரனே உனக்கு நமஸ்காரங்கள். பாவங்கள் இல்லாத கர்மங்களைக் கொண்டவன் நீ. சக்ரதாரி. பாவங்கள் என்னும் மலையை உடைக்கும் கோடலி நீயே. தாமரைக் கண்ணன். யோக பக்தர்களின் செயல்களை செய்விப்பவன். 

65. ஸ்ரீ மங்க3ளாய நம:

மங்க3 ஸ்வரூபவந்தமங்க3ளாநமோ நினகெ3

4ங்க3வில்லத3 கல்யாணதம பூர்ணைஶ்வர்ய ரூப

மங்க3லப்ரத3னு மோக் ஶோப4 4க்தர்கெ3 ஈவி

3ங்கா3பித அங்கா3ங்யபி4ன்ன ஆனந்த3மய நீனு 

மங்கல ஸ்வரூபம் கொண்டவன். ‘மங்களா உனக்கு நமஸ்காரங்கள். குறைகள் அற்ற கல்யாண குணங்களைக் கொண்டவன். பூர்ண ஐஸ்வர்ய ரூபம். மங்களங்களைக் கொடுப்பவனே. உன் பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுப்பவனே. கங்கா பிதனே. அங்காங்கங்களில் ஆனந்தமயனாக இருப்பவனே.

***


No comments:

Post a Comment