ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
120. ஸ்ரீ விஶ்வயோனயே நம:
யக்ஞ ஶாலெயொளு ஹோகு3வி ப4க்தர ரக்ஷிஸுவி
‘விஶ்வயோனியே’ நமிபெ வாமன ஶக்ரவரத3
வாயுதே3வர ஜனக ஸர்வ ஜக3த்காரணனெ
ஈஜ்ய பூஜ்யனே நீ ஸதா3காயோ என்ன கருணாளோ
யக்ஞ சாலைக்கு நீ சென்று, அங்கிருக்கும் பக்தர்களை காக்கிறாய். ‘விஶ்வயோனியே’ உனக்கு என் நமஸ்காரங்கள். வாமனனே. அர்ஜுனனுக்கு அருளியவனே. வாயுதேவரின் தந்தையே. அனைத்து உலகங்களுக்கும் காரணமானவனே. பூஜிக்கத் தக்கவனே. என்னை எப்போதும் காப்பாயாக. கருணைக் கடலே.
121. ஸ்ரீ ஶுசிஶ்ரவஸே நம:
வேத3ததிக3ளலி ப்ரஸித்3த4னாகி3 இருவந்த2
கீர்த்திமான் ‘ஶுசிஶ்ரவா’ நமோ நினகெ3 ஸர்வோத்தம
பவித்ரகர ஸ்ரவணீய நிர்தோ3ஷ கீர்த்தி யஶஸ்
ஆத3ரதி3 நின்னய கதா2 கேளெ பாபஹரவு
வேதங்களில் புகழ்பெற்று போற்றப்படுபவனே ‘ஶுசிஶ்ரவனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வோத்தமனே உன்னை வணங்குகிறேன். பவித்ரமான, கேட்கத் தகுந்த, தோஷங்கள் அற்ற, புகழ் மிக்க உன்னுடைய கதைகளை, பக்தி மரியாதைகளுடன் கேட்டால், அது நம் பாவங்களை போக்குகிறது.
122. ஸ்ரீ அம்ருதாய நம:
மரணவில்லத3வ நீ ‘அம்ருத’ நமோ நினகெ3
அம்ருத நீ அனந்தாஸனாதி3க3ள ஆதா4ரனு
அம்ருதனீ பூர்ணகு3ண நித்யனு ஆத்3த3ரிந்த3
மரணவில்லத3 முக்தாஸ்ரயனு ரமாபதியு
மரணம் இல்லாதவனே. ‘அம்ருதனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். அனந்தாஸன முதலான இடங்களில் நீ வசிப்பவன். அனைத்து குணங்களையும் பூரணமாக கொண்டவன் நீ. நித்யனே. ஆகையால், மரணமில்லாத முக்தியை கொடுப்பவன் நீயே. ஹே ரமாபதியே.
****
No comments:
Post a Comment