Wednesday, November 9, 2022

#29 - 69-70-71 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

69. ஸ்ரீ ப்ராணாய நம:

ப்ரக்ருஷ்ட சேஷ்டாவந்தப்ராணனெநமோ நமோ எம்பெ3

ஸுப்ரசுர ஞானேச்சக்ரியா 3லாதி3ரூப நீனு

ஸுராஸுர நரஸர்வ சராசர சேஷ்டகனு

உருஸுக2மய ப்ராண ஸ்ரீ லக்ஷ்மி ஸமேதனு 

மிகச் சிறந்த செயல்களை செய்பவனே. ப்ராணனே. உனக்கு நமஸ்காரங்கள். அபாரமான ஞான, இச்சை, க்ரியா, பல ஆகிய நற்குணங்களின் ஸ்வரூப ரூபமே  நீ. ஸுர, அஸுரர்கள், நரர்கள், சராசர என அனைத்தின் செயல்களை செய்விப்பவன் நீ. ஸுகமயமான ப்ராணனே. ஸ்ரீலட்சுமி சமேதமாக இருப்பவனே. 

70. ஸ்ரீ ஜ்யேஷ்டாய நம:

மஹாத்ம்யவந்த ஜ்யேஷ்டனே நமோ நமோ நமோ எம்பெ3

மஹாவிபூ4த்யாதி3 மஹாத்ம்யா 3ஹள உள்ளவனு

பி3ரம்மதே3வர ஜனக ஸ்வதந்த்ர ஸர்வே ஸ்ரீ

மஹார்ஹப்ர ஸத்தம ஸனாதன வ்ருத்3தோ3த்தம 

மகிமைகள் பொருந்தியவனே. மூத்தவனே. உனக்கு நமஸ்காரங்கள். மஹாவிபூதி முதலான மகிமைகள் பல கொண்டவனே. பிரம்மதேவரின் தந்தையே. ஸ்வதந்த்ரனே. ஸர்வேஷனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. மிகச் சிறந்த மகிழ்ச்சியைக் கொடுப்பவனே. ஸனாதனனே. அனைவரைவிட மூத்தவனே. 

71. ஸ்ரீ ஸ்ரேஷ்டாய நம:

ப்ரஶஸ்த பூர்ண நிர்தோ3 கு3 ஸ்வரூபனாகி3

நீஸ்ரேஷ்டநமோ நினகெ3 ஸதத ஶரணு எம்பெ3

ஸரஸிஜாஸன ருத்3 மொத3லாத3வரிந்த3 வந்த்3

ஸம்ஸ்துத்ய ஸுபூர்ண பூ4மாதி3 கு3ணனு ஸர்வோத்தம 

போற்றத்தக்கவனே. பூர்ணனே. தோஷங்கள் அற்றவனே. குண ஸ்வரூபனாக இருப்பவனே. நீயே ‘ஸ்ரேஷ்டன். உனக்கு நமஸ்காரங்கள். உன்னை எப்போதும் நான் போற்றுகிறேன். பிரம்ம, ருத்ர, ஆகிய அனைவராலும் வணங்கப்படுபவன். பூஜிக்கப்படுபவன். பூர்ணன். பொறுமை முதலான குணங்களைக் கொண்டவன். ஸர்வோத்தமன்.

***


No comments:

Post a Comment