ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
114. ஸ்ரீ புண்ட3ரீகாக்ஷாய நம:
ப4க்தரிகெ3 ஆஸ்ரயனே ‘புண்ட3ரீகாக்ஷனே’ நமோ
த்ருதீய நேத்ர புண்ட3ரீகாக்3னியாகி3 நினகு3ண்டு
அதி உக்3ரதேஜ நரஸிம்ஹ ப4த்3ரத3 அப4ய
ப4க்தவர ப்ரஹ்லாத3ன ரக்ஷிஸிதி3 ப4க்த ப3ந்தோ4
பக்தர்களின் கதியே. ‘புண்டரீகாக்ஷனே’ உனக்கு நமஸ்காரங்கள். புண்டரீக என்னும் நெருப்பாக உனக்கு மூன்றாவது கண் இருக்கிறது. அபாரமான தேஜஸ் கொண்ட நரசிம்மனே, பக்தர்களில் சிறந்தவனான பிரகலாதனை காத்தாய். பக்தர்களுக்கு நண்பனே.
115. ஸ்ரீ வ்ருஷகர்மணே நம:
யஶஸ்விக3ளாகோ3 ஸ்ரேஷ்டத்வ நின்ன ப4க்தரிகீ3வி
வ்ருஷாகர்மனே நமோ உதா3ஹரண ப்ரஹ்லாத3னு
‘ருதேது தாத்விகான் தே3வான் நாராதாதீ3ம் ஸ்ததை2வ ச
ப்ரஹ்லாதா3து3த்தம: கோனு விஷ்ணு ப4க்தௌ ஜக3த்ரயே’
உன் பக்தர்களுக்கு அவர்கள் புகழ் பெறுமாறு அருள்வாய். ‘வ்ருஷகர்மனே’ உனக்கு நமஸ்காரங்கள். இதற்கு தக்க உதாரணம் என்றால் அது பிரகலாதனே. ருதேது தாத்விகான். என்னும் பாகவத ஸ்லோகம் சொல்வதைப் போல - மூன்று உலகங்களிலும் விஷ்ணு பக்தர்களில் சிறந்தவன் என்றால் அது பிரகலாதனே.
116. ஸ்ரீ வ்ருஷாக்ருதயே நம:
ஹிம்கார ஶிரஸ்கோத்த2 ஸாமவேத3தி3ந்த3 ஆஹ்வான
நீகொம்பி3 ‘வ்ருஷாக்ருதயே’ நமோ நமோ வேத3க3ம்ய
ஸுகக்ஞானமய புஷ்ப ஸ்வரூப நீ அப்ராக்ருத
ஆக்ருதியுள்ள வ்ருஷாக்ருதியே ஶரணெம்பே3 ஸ்வாமி
ஸாமவேதத்தினால் நீ அழைக்கப்படுகிறாய் ‘வ்ருஷாக்ருதயே’ உனக்கு நமஸ்காரங்கள். வேதங்களால் போற்றப்படுகிறாய். ஸுகஞானமயனாக இருக்கிறாயே. அப்ராக்ருத சரீரம் கொண்டவனே. வ்ருஷாக்ருதியே. உன்னை நான் சரணடைகிறேன்.
****
No comments:
Post a Comment