Tuesday, November 1, 2022

#21 - 45-46-47 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

45. ஸ்ரீ விதா4த்ரே நம:

உத்தம ஸ்தோத்ரக3 ஸ்வீகரிஸி 4ரிஸுவி நீ

விதா4தாநமோ சந்தோக3ம்ய 3ருட3வாஹனனே

ஶ்ருதி ஸ்ம்ருதிக3ளிந்த3 ஸம்ஸ்துத்ய ஶ்ரயனு நீனு

முக்தருக3ளிகு3 ஶ்ரயனு ஸுக2தா3 நீனே 

உத்தமமான ஸ்தோத்திரங்களை நீ ஏற்றுக் கொள்கிறாய். விதாதா-வே, உனக்கு நமஸ்காரங்கள். சாம வேதத்தினால் புகழப்படுபவனே. கருட வாகனனே. ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் போற்றப்படுபவனே. அனைவருக்கும் கதி அளிப்பவன் நீயே. முக்தர்களுக்கும் கதி நீயே. சுகத்தைக் கொடுப்பவன். 

46. ஸ்ரீ தா4துருத்தமாய நம:

சதுர்முக2 பி3ரம்மனிகெ3 நியாமக உத்தமனு

தா3துருத்தமனுநமோ ஸர்வேஶ்வர நீனு ப்ரக்ருதி

தா4துக3 வ்யவஹார ப்ரவர்த்திஸுவ ஸ்வாமியு

வைதி3 ஶப்தக3ளிந்த3 முக்2 வ்ருத்தியலி வாச்ய 

சதுர்முக பிரம்மனுக்கு நியாமகன். உத்தமன். தாருதுத்தம-னே உனக்கு நமஸ்காரங்கள். நீயே ஸர்வேஸ்வரன். ப்ரக்ருதியின் அனைத்து செயல்களை செய்விப்பவன். ஸ்வாமியே. வேத சொற்களால் முக்கியமாக புகழப்படுபவன் / போற்றப்படுபவன் நீயே. 

47. ஸ்ரீ அப்ரமேயாய நம:

பரிமாண இல்லத3வனுஅப்ரமேயனேநமோ

யாரிந்த3லு ஸாகல்ய நின்ன அரியலு ஶக்ய

ஶிரி மத்து பி3ரம்மேஶாதி33ளெஷ்டே யத்னிஸித3ரு

ஹரிகு3 மஹிம கொனெ அரியெ ஶக்தரு 

எல்லைகள் அற்றவன். அப்ரமேயனே - உனக்கு நமஸ்காரங்கள். யாராலும், உன்னை முழுமையாக அறிய முடியாது. ஸ்ரீலட்சுமிதேவி, பிரம்ம, ருத்ர ஆகியோர் முயன்றாலும்கூட அது முடியாது. உன்னிடம் இருக்கும் குணங்களின் மகிமைளின் எல்லைகளை யாராலும் அறியமுடியாது.

***

No comments:

Post a Comment