ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
42. ஸ்ரீ மஹாஸ்வனாய நம:
ஞானவாகி3ஹ மஹத4னப்ரத3 ‘மஹாஸ்வனனெ’
நினகெ3 நமோ நமோ பரமபூஜ்ய நீ ஸர்வக்3ஞ
ஆம்னாய ருகாதி3 ஸதா3க3மக3ளிந்த3 ஞேய நீ
விக்ஞான அபரோக்ஷ வீவி ப4க்தர்கெ3 ஹயஶீர்ஷ
ஞானம் என்னும் மிகப்பெரிய செல்வத்தைக் கொடுப்பவனே.
மஹாஸ்வனனே. உனக்கு நமஸ்காரங்கள். பரமபூஜ்யனே. ஸர்வக்ஞனே. ரிகாதி அனைத்து ஆகமங்களாலும்
நீ போற்றப்படுகிறாய். பக்தர்களுக்கு விசேஷமான ஞானத்தை / அபரோக்ஷத்தைக் கொடுப்பவனே.
குதிரை முகம் கொண்டவனே.
43. ஸ்ரீ அனாதி3 நித4னாய நம:
ஜனன ம்ருதி இல்லத3 ‘அனாதி3நித4ன’ நமோ
நீ நித்ய அப்ராக்ருத விக்3ரஹானந்த3 ஞானருபமய
ஜனி ஜராத்3யகி2ள தோ3ஷதூ3ரனு அவிகார
நீனு காலாதீத அக்ஷரனு ஸ்வதந்த்ரனு ஆத்ம
பிறப்பு, இறப்பு இல்லாதவனே ‘அனாதிநிதனனே’ உனக்கு நமஸ்காரங்கள்.
நீ நித்யமான, அப்ராக்ருதமான, ஆனந்தமயமான ரூபம் கொண்டவன். உலகத்தின் எவ்வித தோஷங்களும்
அற்றவன். விகாரம் இல்லாதவன். காலத்தை மீறியவன். அக்ஷரன். ஸ்வதந்த்ரன். ஆத்மனே.
44. ஸ்ரீ தா4த்ரே நம:
ஸ்வீகரிஸி த4ரிஸி நீ ரக்ஷிஸிபோஷிப ‘தா3த’
பா3கி3 ஶிர நமோ எம்பெ3 ஸ்ரீஶ வேதே3ஶ ஸர்வேஶ
ஏகாத்மா ஸ்ரீகரனே பிரம்மன்னத4ரிஸி நாபி4ய
ஸுகமலதி3 ஜன்மவித்து பொரெவி நாராயண
(ஜீவர்களை) ஏற்றுக் கொண்டு, தரித்துக் கொண்டு, காப்பவனான
‘தாத’ நீயே. உனக்கு
நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. வேதங்களின் தலைவனே. ஸர்வேஷனே. ஏகாத்மனே.
ஸ்ரீகரனே. நாபியில், தாமரையில், பிரம்மனை தரித்து, அவரை படைத்து காக்கிறாய். நாராயணனே.
***
No comments:
Post a Comment