Tuesday, October 25, 2022

#14 - 24-25-26 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

24. ஸ்ரீ புருஷோத்தமாய நம:

3ஹுப்ரத3னெ உத்க்ருஷ்டபுருஷோத்தமனேநமோ

பி3ரம்ம ஶானாதி33ளிகு3 முக்த அமுக்தரிகு

மஹாலட்சுமிகு3 உத்தமனு பூ4தி13 உதா3ரனு

மஹைஶ்வர்ய பூர்ண கல்யாணதம தூ3 ஸர்வே 

அனைத்தையும் கொடுப்பவனே. சிறந்தவனே. புருஷோத்தமனே உனக்கு நமஸ்காரங்கள். பிரம்ம ஈஷான ஆகியோருக்கும், முக்த அமுக்த ஜீவர்களுக்கும், ஸ்ரீலட்சுமிதேவிக்கும் என அனைவரை விடவும் உத்தமனே. கருணை கொண்டவனே. மிகச்சிறந்த செல்வங்களை கொண்டவனே. மங்கள கல்யாண ஸ்வரூபனே. அனைவருக்கும் தலைவனே. 

25. ஸ்ரீ ஸர்வாய நம:

ஸர்வப்ராணிக3 ஸ்வாமிஸர்வனேநமோ நினகே3

ஸர்வஸ்ருஷ்டாபாதா அத்தா நியாமகனாகி3ருவி

ஸர்வனெந்தெ3னிஸுவியோ ஸர்வத3லி வ்யாப்த நீனு

ஸர்வஶப்த33ளிந்த3 முக்2 வ்ருத்தியலி வாச்யனு 

அனைத்து பிராணிகளின் தலைவனே. ஸர்வனே. உனக்கு நமஸ்காரங்கள். அனைவரின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயங்களுக்கு நீயே காரணம். ஸர்வ என்று அழைக்கப்படுகிறாய். அனைத்திலும் வ்யாப்தனாக இருக்கிறாய். ஸர்வ ஷப்த வாச்யன் (அனைத்து எழுத்துக்களாலும் நீயே அழைக்கப்படுகிறாய்). 

26. ஸ்ரீ ஶர்வாய நம:

ஜக3த்தின ஸுக2 க்ரீடா3 நடெ3ஸுவஶர்வநமோ

ஸுக2 ஸ்வரூப நீ ப்ரவ்ருத்தி மாள்பெ காணிஸத3லெ

4க்தாரி ஸுரத்3விட் அக4சாரிது3ஷ்ட 3லக்ரூர

அத4மரன்னு ஸம்ஹார மாடு3வியோ ஶர்வ ஸ்வாமி 

உலகின் சுக செயல்களை செய்விக்கும் ‘ர்வனே உனக்கு நமஸ்காரங்கள். நீ சுக ஸ்வரூபமாக இருக்கிறாய். அனைத்தையும் நடத்துகிறாய். காட்டிக் கொள்ளாமல், பக்தர்களின் கஷ்டங்களை பரிகரிக்கிறாய். அதமர்களை சம்ஹாரம் செய்கிறாய். ஸ்வாமியே.

***


No comments:

Post a Comment