ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
இரண்டாம் ஸந்தி
கல்யாணதம ரூப அனக4 ஸுகு3ணார்ணவனெ
மாலக்ஷ்மிபதி பி3ரம்ம விஶ்வாக்2ய விஷ்ணு வஷட்கார
ஶீல ஜீவோத்தம வர வாயு பி3ரம்மதா4மன ஹ்ருத்
கீலாலஜாந்தஸ்ய பரமாத்ம கேஶவ நமஸ்தே ||ப
பல்லவி:
அனந்த கல்யாண ரூபங்களைக் கொண்டவன்; தோஷங்கள் அற்றவன்; நற்குணங்களைக் கொண்டவன்; லட்சுமிபதி; உலகத்தை காப்பவன்; உலகின் அனைத்து செயல்களையும் செய்பவன்; வாயு பிரம்மர்களின் இதயத்தில் அந்தர்கதனாக இருப்பவன்; பரமாத்மனான கேசவனே, உன்னை வணங்குகிறேன்.
1. ஸ்ரீவிஷ்வாய நம:
வர வாய்வந்தர்யாமி ‘விஶ்வ’ நமோ நமோ நினகெ3
சராசர ஸர்வ ஒளஹொர வ்யாப்த நீ ஸர்வேஶ |
ப்ரக்ருதி நியாமக ஜக3ஜ்ஜன்மாதி3க3ள கர்த்த
கரு3ட3வாஹன பரமபூர்ண ஸ்வதந்த்ர ஸ்ரீஶ ||
முக்யபிராணாந்தர்கதனான விஷ்வனே உனக்கு நமஸ்காரங்கள். சராசரங்கள் என அனைவருக்குள்ளும் / அனைத்திற்குள்ளும் நீ வ்யாப்தன். நீயே அனைவருக்கும் ஈசன். ப்ரக்ருதியை கட்டுப்படுத்துபவன் நீயே. ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரணன் நீயே. கருட வாகனனே. அனைத்திலும் பூரணனானவன். ஸ்வதந்த்ரன். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவன்.
2. ஸ்ரீவிஷ்ணவே நம:
விஶேஷதி3 சேஷ்டெக3ள மாடி3ஸுவவனு நீனு
அஸம உருப3லாதி3ரூப ‘விஷ்ணு’ நமஸ்துப்4யம்
தே3ஶகால வஸ்து ஸர்வ வ்யாபிஸிதெ3 த்ரிவிக்ரம
ஸுஶுபரூபதி3 பாத3க்ரமண மாடி3தி3 விஷ்ணோ ||
அனைத்து செயல்களையும் செய்விப்பவன் நீயே. ஒப்பீடு இல்லாதவன். பலம் முதலான அனைத்தின் ரூபம் நீ. விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன். தேஷ, கால, வஸ்துகள் என அனைத்திலும் நீ வியாபித்திருக்கிறாய். மங்களகரமான, த்ரிவிக்ரம ரூபத்தில், மூன்றடி நிலம் அளந்தாய். விஷ்ணுவே.
***
No comments:
Post a Comment