Sunday, October 2, 2022

[பத்யம் #134] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #134] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 134]

ஸுலப4வெனிபீ1 தா3 3ர்பண

நலிவ மனதொ3ளக3ரிது படி2ஸலு

களெது3 மலினவ ஹரிய தோர்புத3 அந்தரங்க33லி |

2லவ மாட33லென்ன பி3ன்னப1

ஸலிஸி ஸிரிவரனொலிமெ படெ3யுத

இளெயொளகெ3 ஸஜ்ஜனரு மெரெயலி தா3ஸரெந்தெ3னிஸி ||134 

ஸுலபவெனிப - மிகவும் எளிமையானதான; தாஸ தர்பண - இந்த ஹரிதாஸ தர்பண கிருதி; நலிவ - அலைபாயும்; மனதொளு - மனதைக் கொண்டவர்கள்; அரிது படிஸலு - தெரிந்து படித்தால்; மலினவ களெது - தோஷங்களைப் போக்கி; அந்தரங்கதலி - மனதின் அந்தரங்கத்தில்; ஹரிய தோர்புது - ஸ்ரீஹரியைக் காட்டுகிறது; சலவ மாடதலெ - என் மேல் வெறுப்பு காட்டாமல்; என்ன பின்னப ஸலிஸி - என்னுடைய வேண்டுகோளை ஏற்று; ஸிரிவரனொலிமெ - ஸ்ரீஹரியின் தரிசனத்தை; படெயுத - பெற்று; ஸஜ்ஜனரு - ஸஜ்ஜனர்கள்; தாஸரெந்தெனிஸி - ஹரிதாஸர் என்று சொல்லிக்கொண்டு; இளெயொளகெ - இந்த பூமியில்; மெரெயலி - சஞ்சரிக்கட்டும்; 

இந்த ஹரிதாஸ தர்பண கிருதியை படிப்பதன் பலனாக ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர் சொல்வது என்ன என்பது இந்த பத்யத்தில் தெரிகிறது. 

மிகவும் எளிமையானதான இந்த ஹரிதாஸ தர்பண கிருதி, அலைபாயும் மனதைக் கொண்டவர்கள் தெரிந்து படித்தால், அவர்களுடைய தோஷங்களைப் போக்கி, மனதின் அந்தரங்கத்தில் ஸ்ரீஹரியை காட்டுகிறது. என் மேல் வெறுப்பு காட்டாமல் என்னுடைய வேண்டுகோளினை ஏற்று, ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெற்று, ஸஜ்ஜனர்கள் ஹரிதாஸர் என்று சொல்லிக் கொண்டு இந்த பூமியில் சஞ்சரிக்கட்டும்

***


No comments:

Post a Comment