Saturday, October 29, 2022

#18 - 36-37-38 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

36. ஸ்ரீ ப்ரப4வே நம:

பூ4மி ஸ்வர்க்கா3தி33ளல்லி நீ ப்ரக்ருஷ்டப்ரபு4ஸ்வாமி

நமோ பாரதந்த்ராதி3 தோ3ஷதூ3 ஸ்ரீ பூ4ரமண

பூ4மாதி3கு3 மஹைஶ்வர்ய ஸம்பூர்ண நீ ஸர்வதா3

ஸமாதி4 ரஹிதோத்தம அவதாரத3ல்லியு 

பூமி, ஸ்வர்க்காதிகளில் நீ சிறந்தவன். ‘பிரபு. ஸ்வாமியே உனக்கு நமஸ்காரங்கள். பாரதந்த்ர முதலான தோஷங்கள் எதுவும் அற்றவன். ஸ்ரீ-பூ-ரமணனே. அனைத்து நற்குணங்களையும் கொண்டவன். மிகச் சிறந்த செல்வங்களைக் கொண்டவன். ஸம்பூர்ணனே. நீ எப்போதும் சம-அதிக இல்லாத ஸர்வோத்தமன். அவதாரங்களிலும்கூட இதுவே. 

37. ஸ்ரீ ஶ்வராய நம:

ஸர்வ நியாமகனுஶ்வரநமோ நமோ எம்பெ3

பார்வதீஶாதி33ளிகு3 உத்தமனு அஜபிதா

தே3வனீ மஹைஶ்வர்ய அனிர்விண்ண ஆனந்த3 ரூப

தே3வி லக்ஷ்மீரமண தோ3 தூ3 புருஷோத்தம 

அனைத்தையும் வழி நடத்துபவன். ‘ஈஶ்வர உனக்கு நமஸ்காரங்கள். பார்வதியின் தலைவனான ஈசன் முதலான அனைவரை விட உத்தமன் நீயே. பிரம்மனின் தந்தையே. தேவனே. மிகச் சிறந்த செல்வங்களைக் கொண்டவனே. சோர்வு அற்றவன். ஆனந்த ரூபன். தேவியான லட்சுமியின் தலைவன். தோஷங்கள் அற்றவன். புருஷோத்தமனே. 

38. ஸ்ரீ ஸ்வயம்பு4வே நம:

ஸ்வதந்த்ரனாகி3யே ஆவிர்ப4விஸுவி நீ ஸ்வயம்பு4

ஆத3ரதி3 நமோ எம்பெ3 தீ3பாத் தீ3பாந்தர வோலு

மோத3 சின்மய அவதாரக3 ப்ரகடிஸுவி

மத்ஸ்யாதி3 அவதாரக3ளு கர்ம நிமித்தவல்ல 

ஸ்வதந்த்ரமாகவே (யாருடைய தயவும் / உதவியும் இன்றி) தோன்றுவாய். நீ ஸ்வயம்பு. உனக்கு மரியாதையுடனான நமஸ்காரங்கள். ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்றுவதைப் போல, உன்னுடைய சின்மய அவதாரங்களை நீ வெளிப்படுத்துகிறாய். அத்தகைய அவதாரங்கள், ஏதோவொரு கர்மங்களை செய்வதற்காக வந்தவை அல்ல (உன் இஷ்டப்படியே வந்தவை).

***


No comments:

Post a Comment