ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
அறிமுக ஸந்தி (முன்னுரை)
ஸ்ரீ மஹாபா4ரததி3 அனுஷாஸன பர்வத3லி
பீ4ஷ்ம யுதி4ஷ்டி2ரகெ3 போ4தி3ஸித்3து3 ஈ நாமக3ளு
ஆமய ப4ய ப3ந்த4னாஷகவு ஷுப4ப்ரத3வு
ரமேஷ விஷ்ணுவ தி3வ்யோரு ப3ல ஸஹஸ்ரநாம ||3
இத்தகைய மகாபாரதத்தில், அனுஷாஸன பர்வத்தில், யுதிஷ்டிரனுக்கு பீஷ்மாசார்யர் போதித்த நாமங்கள் இவை. அனைத்து வித பயங்களையும், சம்சார பந்தனங்களையும் அழிக்க வல்லவை இது. நலன்களைக் கொடுக்க வல்லவை. ரமேஷனான ஸ்ரீவிஷ்ணுவின் திவ்யமான, சிறப்பு வாய்ந்த பெயர்கள் இந்த ஸஹஸ்ர நாமங்கள்.
மஹிதா3ஸ ஸ்ரீஹரிகெ3 ப்ரியதமவாகி3ருவ
ப்3ருஹதீ ஸஹஸ்ரக3ள படி2ஸித3 புன: புன:
ஸ்ரீஹரிய தோஷிஸித3 அனுக்3ரஹ ஹொந்தி3த3னு ||4
இந்திரன் செய்த மிகப்பெரிய யாக சமயத்தில், விஷ்வாமித்ர ரிஷியானவர், அங்கு வந்த மஹிதாஸ ஸ்ரீஹரியை, அவருக்கு மிகவும் பிடித்ததான ப்ருஹதி ஸஹஸ்ரங்களை திரும்பத் திரும்ப சொல்லி, அவரை வணங்கினார். ஸ்ரீஹரியின் அருளைப் பெற்றார்.
விஶ்வாமித்ர ப்3ருஹதி ஸஹஸ்ர ருக்குக3ளல்லதெ3
விஶ்வவிஷ்ணு வஷட்காராதி3 ஸஹஸ்ர நாமக3ள்கு3
ஸ்ரீஸத்யஸந்தா3தி3 வைஷ்ணவோத்தமரு ஸுரிவர்யரு
விஶத3தி3 ப்ரதியொந்து3 ஶ3ப்3தா3ர்த்த2வ பேளிஹரு ||5
இத்தகைய விஷ்வாமித்ர ரிஷிகள் கூறிய ப்ருஹதி ஸஹஸ்ர ரிக்குகள் அல்லாமல்; விஷ்வம் விஷ்ணுர் வஷட்கார என்று துவங்கும் ஸஹஸ்ர நாமங்களுக்கும்; ஸ்ரீஸத்ய ஸந்த தீர்த்தர் முதலான வைஷ்ணவோத்தமர்கள் / மிகச்சிறந்த தேவதைகள், அந்த ஒவ்வொரு சொல்லின் அர்த்தங்களையும், மிகவும் அற்புதமாக விளக்கினர்.
***
No comments:
Post a Comment