Saturday, October 22, 2022

#11 - 15-16-17 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

15. ஸ்ரீ ஸாக்ஷிணே நம:

ஸாக்ஷாத்33ர்ஶியுஸாக்ஷிநினகெ3 நமோ எம்பே3னு

ஸர்வாத்4யக்ஷனு ஸர்வதோமுக2னு ஸ்ரீ மஹாவிஷ்ணோ

பூ4தாந்தராத்மா நீனு ப்ராக்ருத கு3 ரஹிதனு

ஸ்ருதி ஸ்ம்ருதிக3ளு நீ ஸாக்ஷி என்னுதிவெயோ ஸ்ரீ 

சாட்சாத்தாக தரிசனம் கொடுப்பவன் ‘ஸாக்‌ஷியே உனக்கு நமஸ்காரங்கள். ஸர்வோத்தமன். அனைத்து இடங்களிலும் வ்யாபித்து இருப்பவன். ஸ்ரீமகாவிஷ்ணு. அனைத்து சேதனர்களிலும் ஆத்மனாக உள்ளே இருப்பவன் நீ. ப்ராக்ருத குணங்களான ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் இல்லாதவன். ஸ்ருதி, ஸ்ம்ருதிகள் உன்னை ஸாக்‌ஷி என்று அழைக்கின்றன. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. 

16. ஸ்ரீ க்ஷேத்ரக்ஞாய நம:

ஜீவ ஶரீரவ திளித3க்ஷேத்ரக்ஞநமோ நமோ

ஜீவ ஶரீராதி3 ஸர்வக்ஷேத்ர வ்யாப்தியாகி3ருவி

ஸர்வக்ஞ ஸர்வ நியாமகனு நீனேவெ அன்யரல்ல

ஜீவனிகெ3 க்ஷேத்ரக்ஞத்வ அனுபபன்ன அபூர்ண 

ஜீவ சரீரங்களில் இருந்து, அவற்றை அறிந்தவனே ‘க்‌ஷேத்ரக்ஞனே உனக்கு நமஸ்காரங்கள். ஜீவ சரீரங்கள் மற்றும் அனைத்து க்‌ஷேத்திரங்களில் வ்யாப்தனாக இருக்கிறாய். ஸர்வக்ஞன். அனைத்தையும் நடத்துபவன் நீயேதான், வேறு யாரும் அல்ல. ஜீவனுக்கு க்‌ஷேத்ரக்ஞத்வத்தை அருள்பவன், யோக்யதைக்கேற்ற பலன்களைக் கொடுப்பவன். முழுமையற்ற நிலையைக் கொடுப்பவன். 

17. ஸ்ரீ அக்ஷராய நம:

நாஶரஹிதனு நீனுஅக்ஷரனுநமோ நமோ

ஶாஶ்வத வைகுண்டாதி3யலி ரமிபி ஸ்வரமண

ஸர்வாதா4 நின்னதீ4னே அவியோகி3 ரம்மே

ஸ்ரீ நின்னலி ஓத ப்ரோதவாகி3ஹுது3 ஸ்ரீதத்வ || 

அழிவில்லாத நீயே ‘அக்‌ஷரன் உனக்கு நமஸ்காரங்கள். நிரந்தரமாக (நிரந்தரமான) வைகுண்ட முதலான தாமங்களில் நிலைத்திருக்கிறாய். எதற்கும் யாரையும் எதிர்பார்க்காத ஸ்வரமணன். அனைவருக்கும் தலைவன். அனைவருக்கும் ஆதாரமானவன். உன் நியத பத்னியான லட்சுமிதேவி, உன் அதீனமாகவே இருக்கிறாள். லட்சுமிதேவியின் தலைவன். ஸ்ரீதத்வமானது, உன்னில் (குறுக்கும் நெடுக்குமாக) எங்கும் நிறைந்திருக்கிறது.

***


No comments:

Post a Comment