ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
39. ஸ்ரீ ஶம்பு4வே நம:
ஆனந்த3 உத்பாத3க ஸ்தா2னவாகி3ருவந்த2 ‘ஶம்பு4’
நினகெ3 நமோ ஸுக2நிதே4 ஆனந்தோ3த்3ரேகதி3ந்த3
ஆனந்த3 லீலாவதார ஜக3த்ஸ்ருஷ்ட்யாதி3க3ளன்னு
நீனே மாடி3 ஸாத4னெகெ3ய்ஸி ஸுக2 ஒத3கி3ஸுவி
மகிழ்ச்சியை உருவாக்கும் இடமாக இருக்கும் ‘ஶம்பு’வே உனக்கு நமஸ்காரங்கள். ஸுக நிதியே. மிக்க மகிழ்ச்சியுடன், உன் லீலைகளால், உலகின் ஸ்ருஷ்ட்யாதி அனைத்தையும் நீயே செய்து, அனைவர் மூலமாக ஸாதனைகளை செய்ய வைத்து, சுகங்களை கொடுக்கச் செய்கிறாய்.
40. ஸ்ரீ ஆதி3த்யாய நம:
உதா3ர விஸ்தார மொத3லு மரியாதெ3 உள்ளவ
‘ஆதி3த்ய’ நமோ ப4க்தி ஸுபூஜெக3ள கொள்ளோ ஸ்ரீஶ
ஆதி3த்யாந்தஸ்த2னாகி3ருவுத3ரிம் ஆதி3த்ய நீனு
அதி3திஸுத வாமன உபேந்த்3ர நமோ நமஸ்தே
கருணை கொண்டவனே. (அனைவரிடமிருந்தும்) முதல் மரியாதையைக் கொண்டவன். ஆதித்யனே உனக்கு நமஸ்காரங்கள். (என்னிடமிருந்து) பக்தி, பூஜைகளை பெற்றுக் கொள்வாயாக. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. ஆதித்யனில் இருப்பதால் நீ அதித்யா. அதிதி ஸுதனே. வாமனனே. உபேந்திரனே. உனக்கு நமஸ்காரங்கள்.
41. ஸ்ரீ புஷ்கராக்ஷாய நம:
நினக3ன்ய புஷ்டிகரர்யாரிஹரோ அவரன்ன
நீ நிராஸமாடி3 புஷ்டிகரரின்யாரு இல்லதெ3
நீனாகி3யே இருவி ‘புஷ்கராக்ஷனே’ நமோ எம்பெ3
வனஜாக்ஷ அஸம உதா3ர போஷண ஸமர்த்த2
உனக்கு ஆதாரமாக யார் இருக்கிறார்கள் என்று நினைக்கிறாரோ, அவர்களை வென்று, உனக்கு ஆதாரம் என்று யாரும் இல்லாமல் நீயாகவே இருப்பாய். புஷ்கராக்ஷனே. உனக்கு நமஸ்காரங்கள். தாமரைக் கண்ணனே. சமம் இல்லாதவனே. கருணாளுவே. அனைவரையும் காப்பவனே.
No comments:
Post a Comment