[பத்யம் #136] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 136]
ஸந்தி3ரலு ப3ஹுதா3ன்ய க3த1ஶக1
ஒந்து3 ஸாவிரதெ3ண்டு1 நூரர
முந்தெ3 அரவத்ததி4கவாகி3ஹ வருஷவித3ரல்லி |
குந்த3த3லெ ஸம்பூர்ணகெ3ய்ஸித3
ப3ந்து4ரத3 பத்3யக3ள மணிஸர
கந்த3ரதொ3ளர்ப்பிபேனு ஸ்ரீ ரமாகாந்த1 விட்ட2லகெ3 ||136
பஹுதான்ய - பஹுதான்ய ஆண்டு; ஸந்திரலு - முடிந்திருக்க; கதஷக - ஷக ஆண்டு; ஒந்து ஸாவிரதெண்டு நூரர - 1800; முந்தெ அரவத்ததிகவகிஹ - 60; வருஷதல்லி - இந்த ஆண்டில்; குந்ததலெ - எவ்வித குறை / தோஷங்களும் இன்றி; ஸம்பூர்ணகெய்ஸித - முடித்த; பந்துரத - அழகான; பத்யகள - இந்த பத்யங்களின்; மணிஸர - மாலையை; ஸ்ரீரமாகாந்த விட்டலகெ - ஸ்ரீரமாகாந்த விட்டலனுக்கு; கந்தரதொளு - அவனுடைய கழுத்தில்; அர்ப்பிபேனு - அர்ப்பிக்கிறேன்.
இந்த கிருதியை முடித்த ஆண்டினை இவ்வாறு சொல்கிறார் சக ஆண்டு 1860. அதாவது கிபி 1938. இந்த ஆண்டில் இந்த கிருதியை எழுதி முடித்திருப்பதாக சொல்கிறார் ஸ்ரீதாஸர். பஹுதான்ய என்று சொல்வதும் சரியாக 1938க்கு பொருந்தி வருகிறது என்பதை அறிகிறோம். இதனை தன் பிம்பமூர்த்தியான ஸ்ரீரமாகாந்த விட்டலனுக்கு சமர்ப்பிக்கிறார்.
பஹுதான்ய ஆண்டு முடிந்திருக்க, ஷக ஆண்டு 1860ம் ஆண்டில், எவ்வித குறை / தோஷங்களும் இன்றி, முடித்த இந்த பத்யங்களின் மாலையை ஸ்ரீரமாகாந்த விட்டலனுக்கு, அவனுடைய கழுத்தில் அர்ப்பிக்கிறேன்.
***
மிக்க வந்தனங்கள். நன்றி.
ReplyDelete