Sunday, October 23, 2022

#12 - 18-19-20 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

18. ஸ்ரீ யோகா3 நம:

யக்ஞாதி3 கர்மயோஜனெமாள்பயோக3நமோ எம்பெ3

ஸுத்4யான மொத3லாத3 கர்மக3 ப்ரேரிஸுவி நீ

காயமனஸிஜ தோ3 மத்து ஸம்ஸார நிவ்ருத்தி

நித்ய ஸுக2 மோக்ஷக்கெ உபாயனாகி3ருவி நீனே 

யக்ஞம் முதலான கர்மங்களுக்கான செயல்களை செய்விப்பவனான ‘யோகனே உனக்கு நமஸ்காரங்கள். தியானம் முதலான கர்மங்களை செய்யும்படி செய்க்கிறாய். உடல், மனம் ஆகியவற்றிற்கு வரும் நோய்களின் பரிகாரகன் நீயே. சம்சார சாகரத்தை தாண்டச் செய்கிறாய். நித்ய ஸுகமான மோட்சத்தை அருள்பவன் நீயே. 

19. ஸ்ரீ யோக3விதா3ம் நேத்ரே நம:

வேத3 ஸர்வவு யோக3 வ்ருத்தியலி மாத4வன்னேவெ

ப்ரதிபாதி3ஸுதிவெ எந்து3 அரித 4க்தரிகெ3

மோத3வீவியோ யோக3விதா3ம் நேதா நமோ நினகெ3

4க்தரிகெ3 மோக்ஷாக்2 ஸுப2 ப்ராபகனு நீனே 

வேதங்கள் அனைத்தும் மாதவனையே புகழ்கின்றன என்று அறிந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ‘யோகவிதாம் நேதனே உனக்கு நமஸ்காரங்கள். பக்தர்களுக்கு மோட்சமே முதலான பலன்களைக் கொடுப்பவன் நீயே. 

20. ஸ்ரீ ப்ரதா4 புருஷேஷ்வராய நம:

ப்ரக்ருதிகு3 புருஷனிகு3 ஶனாகி3ருவந்தா2

ப்ரதா4 புருஷேஶ்வரநமோ நமோ எம்பெ3 ஸ்ரீ

3ந்த4 ஹேது ப்ரக்ருதிகு3 3த்34மான ஜீவனிகு3

ஸத்தாதிதா3தனு ப்ரவர்த்தக ஸ்வாமி நமோ ஆத்மா

 

ப்ரக்ருதிக்கும், புருஷர்களுக்கும் தலைவனாக இருப்பவனே ‘ப்ரதான புருஷேஶ்வரனே உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. சம்சார பந்தனங்கள் இல்லாத ப்ரக்ருதிக்கும், சம்சார பந்தனங்கள் உள்ள ஜீவனுக்கும் ஸத்தா (இருப்பு) முதலான அனைத்தையும் கொடுத்து, அவர்களை வழிநடத்துபவன். ஸ்வாமியே உனக்கு நமஸ்காரங்கள். ஆத்மனே.

***

No comments:

Post a Comment