Wednesday, October 5, 2022

[பத்யம் #137] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #137] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 137]

மங்க3ளம் ஸ்ரீ லகுமிலோலகெ3

மங்க3ளம் ஸ்ரீ வாயுபிதனிகெ3

மங்க3ளம் தா3ஸோஹமெம்ப3 நிருத பொரெவனிகெ3 |

மங்க3ளம் கு3ருவந்த1ரங்க3கெ3

மங்க3ளம் நிஜ தா3ஸப்ரீயகெ3

மங்க3ளவ பாடு3வெனு ஸ்ரீ ரமாகாந்த விட்டலகெ3 ||137 

ஸ்ரீலகுமிலோலகெ - ஸ்ரீலட்சுமியின் தலைவனுக்கு; ஸ்ரீவாயுபிதனுக்கு - ஸ்ரீவாயுதேவரின் தந்தைக்கு; தாஸோஹமெம்பர - தாஸோஹம் என்பவர்களை; நிருத பொரெவனிகெ - எப்போதும் காப்பவனுக்கு; குருவந்தரங்ககெ - குருவின் அந்தர்யாமியாக இருப்பவனுக்கு; நி தாஸப்ரீயகெ - தாஸர்களை எப்போதும் விரும்புபவனுக்கு; மங்களம் - மங்களம் உண்டாகட்டும்; ஸ்ரீரமாகாந்த விட்டலகெ - ஸ்ரீரமா காந்த விட்டலனுக்கு; மங்களவ பாடுவெனு - மங்கள கோஷம் செய்கிறேன். 

ஹரிதாஸ தர்பண என்னும் இந்த கிருதியின் கடைசி பத்யத்தினை ஸ்ரீஹரிக்கு, தன்னுடைய பிம்பமூர்த்திக்கு மங்களம் பாடியவாறு முடித்து வைக்கிறார். 

ஸ்ரீலட்சுமியின் தலைவனுக்கு, ஸ்ரீவாயுதேவரின் தந்தைக்கு, தாஸோஹம் என்பவர்களை எப்போதும் காப்பவனுக்கு, குருவின் அந்தர்யாமியாக இருப்பவனுக்கு, தாஸர்களை எப்போதும் விரும்புபவனுக்கு, மங்களம் உண்டாகட்டும். ஸ்ரீரமா காந்த விட்டலனுக்கு மங்கள கோஷம் செய்கிறேன். 

அஸ்மத் குர்வந்தர்கத பாரதிரமண முக்யபிராணாந்தர்கத ஸ்ரீஜகன்னாத கேசவ ப்ரியதாம்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

 ***


No comments:

Post a Comment