ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
அறிமுக ஸந்தி (முன்னுரை)
அனக4கு3ணவாரிநிதி4 ஸ்ரீஶ ஸ்ரீவேத3வ்யாஸ
ஈ நாம அனுஷ்டுப் ஶ்லோகரூப மந்த்ரக்கெ ரிஷியு
கிருஷ்ண பரமாத்மனேவெ ப்ரதிபாத்3ய தே3வதெயு
அனிலஸ்த2 நாராயண வாஸுதே3வ மஹிதா3ஸ ||6
அபாரமான அற்புத குணங்களின் கடலான, ஸ்ரீலட்சுமியின் தலைவனான, ஸ்ரீவேதவ்யாஸரே இந்த ஸஹஸ்ரநாமங்களுக்கு ரிஷி. இது அனுஷ்டுப் சந்தஸ்ஸில் இருக்கிறது. இதில் புகழப்படும் தேவதை யார் என்றால் - அது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனே. அவனே முக்யபிராணந்தர்கதனான நாராயணன். வாஸுதேவன். மஹிதாஸன்.
முந்து3 ப3ருவ பத்3யக3ளொள் ப்3ருஹதி ஸஹஸ்ரத3
அதி ஸங்க்ஷேப அபி4ப்ராய ப்ரத2மத: ஆமேலெ
ததி3தர அர்த்த2க3ளு ஸஹஸ்ரநாம ஶப்த3க்கு
அதி ஸங்க்ஷேப வ்யக்த ஹரிநுடிது3 நுடிஸித்3து3 ||7
அடுத்து வருவதான பத்யங்களில், ப்ருஹதி ஸஹஸ்ரத்தின் மிகச் சுருக்கமான விஷயங்கள் முதலில் சொல்லப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வேறு சில அர்த்தங்களும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக ஸ்ரீஹரி சொல்லி, சொல்ல வைத்ததைப் போல, ஸஹஸ்ர நாமங்களுக்கும் அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன.
பத்3யபங்க்திக3ளோள் மொத3லு நமோ ஶப்3த3 பர்யந்த
அதி ஸங்க்ஷேபதி3 ஸூசிதவு ப்3ருஹதி தாத்பர்ய
தத3னந்தர ப3ருவுவு நாம ஶ3ப்3தா3ர்த்த2க3ளு
அதி ஸங்க்ஷேபிததி3 த3ர்ஷிதவு ஸ்தோத்ர ரூபத3லி ||8
இந்த பத்யங்களில் ‘நமோ’ என்ற சொல் வரும்வரை, அந்த நாமத்தின் பொருள் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு வருவது, அந்த நாமத்தின் வேறு அர்த்தங்கள். இவை அனைத்தும் ஸ்தோத்திர ரூபத்தில், சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளன.
***
No comments:
Post a Comment