ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
21. ஸ்ரீ நாரஸிம்ஹ வபுஷே நம:
‘நாரஸிம்ஹவபு’ நமோ த்4யாயேன் ந்ருஸிம்ஹ முரு வ்ரு
த்த ரவி த்ரினேத்ரம் ஜானுப்ரஸக்த கரயுக3 ம
தாபராப்4யாம் சக்ரம்த4ரஞ்ச த3த4தம் ப்ரியயா ஸ
மேதம் திக்3மாம்ஶு கோட்யதி4க தேஜஸ் ஸமக்3ர்ய ஶக்திம்
‘நாரஸிம்ஹவபு’வே உனக்கு நமஸ்காரங்கள். சூரியனைப் போல சிவந்த 3 கண்கள், அகன்ற தோள்கள்;
அதற்கு அருகில் இரு நீளமாக கைகள்; அதில் சக்ராதி ஆயுதங்கள்; லட்சுமிதேவியுடன் அமர்ந்திருக்கும்;
மிக அதிகமான தேஜஸ்ஸினைக் கொண்டவனான நரசிம்ம ஸ்வாமியை நாம் தியானம் செய்வோம்.
22. ஸ்ரீ ஸ்ரீமதே நம:
ஸம்பத்துவந்தனே ஸ்ரீமான் நமோ நமோ நமோ எம்பே3
ஶோபனைஶ்வர்ய ஸுந்த3ர அமித உஜ்வலரூப
‘ஸ்ரீபதே’ ப்4ருகு3ராம வாமன வேத3வ்யாஸ ஹரி
அபரிமித ஸுகக்ஞான ப3லாதி கு3ணபூர்ண
செல்வந்தனே. ஸ்ரீமந்தனே. உனக்கு நமஸ்காரங்கள். ஒளிர்வதான
செல்வங்களைக் கொண்டவனே. அழகானவனே. எல்லைகள் அற்றவனே. ஒளிர்பவனே. ஸ்ரீபதியே. ப்ருகுராமனே.
வாமனனே. வேதவ்யாஸனே. ஹரியே. அபாரமான ஸுக, ஞான, வலிமை முதலான குணங்களை முழுமையாகக் கொண்டவனே.
23. ஸ்ரீ கேஶவாய நம:
பி3ரம்மனிகு3 லக்ஷ்மிகு3 கீர்த்தி கொடு3வ ஸ்வாமி நீனு
அஹர்னிஷி ஸ்மர்தவ்ய ‘கேஶவ’ நமஸ்தே நமஸ்தே
மஹாது3ஷ்ட கேஶியன்ன கொந்தி3யோ ஜனார்த்த4னனே
பி3ரம்ம ஈஶான நியாமக மஹார்ஹ ப3லஶாலி
பிரம்மனுக்கும், லட்சுமிதேவிக்கும் புகழினைக் கொடுக்கும்
ஸ்வாமி நீயே. எப்போதும் நினைக்கத் தக்க (நினைக்க வேண்டியவனே) கேஶவனே. உனக்கு நமஸ்காரங்கள். அசுரனான கேஶியை கொன்றவனே. ஜனார்த்தனனே. பிரம்ம, ஈஷான ஆகியோரின்
நியாமகனே (அவர்களை வழி நடத்துபவனே). பலசாலியே.
***
No comments:
Post a Comment