ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
அறிமுக ஸந்தி (முன்னுரை)
ஸ்த்ரீயரு கிருஷ்ண மந்த்ரோபதி3ஷ்டர் படி2ஸெ அர்ஹரு
காயித்ர்யாத்3யுபதே3ஶ அனதி4காரி ஸர்வரிகு3
தி3வ்ய பா4ஷ்யரூப ஈ நுடி3க3ள ஶ்ரவண மாத்ர
காய வாங்மன ஶுசி ப4க்தி ஶ்ரத்3தா4 இரலேபே3கு ||12
பெண்கள், கிருஷ்ண மந்திரத்தை உபதேசம் பெற்றவர்கள், காயத்ரி உபதேசத்திற்கு அதிகாரம் இல்லாதவர்கள் என அனைவரும், அழகான, பாஷ்ய ரூபமான இந்த நுடிகளை கேட்டால் மட்டுமே, அக புற என அனைத்தும் சுத்தம் ஆகிறது. இதற்கு ஸ்ரத்தா பக்தியும் அவசியம் இருக்க வேண்டும்.
நம: பரஸ்ம்யை புருஷாய பூ4யஸே ஸது3த்3ப4வ
ஸ்தா2ன நிரோத4 லீலயா க்3ருஹீத ஶக்தி த்ருதீயா
ய தே3ஹினாம் அந்தத்4ருவாயானு பலப்4ய வர்த்மனே
ஸவிஷ ஆத்மாத்மவதாம் அதீ4ஶ்வர ஸ்த்ரயீமய:
||13
நம:பரஸ்மை புருஷாய ... வர்த்மனே - இது பாகவத ஸ்லோகம் (2-4-12). ஸ்ருஷ்டி ஸ்திதி லயத்திற்கு காரணனான, அனைவருக்குள்ளும், அனைத்திலும் வ்யாப்தனான, ஸர்வோத்தமனான ஸ்ரீஹரிக்கு என்னுடைய வணக்கங்கள்.
த4ர்மமயஸ்தபோமய: க3தவ்யரீகைரஜம் ஶம்
கராதி3பி4ர் விதர்க்ய லிங்கோ3 ப4க3வான் ப்ரஸீத3தாம்
நமஸ்த்ஸ்மை ப4க3வதே வாஸுதே3வாய வேத4ஸே
ஸ்ரீபா4க3வத த்விதீய ஸ்கந்த4 சதுர்த்த2 அத்4யாய ||14
ஸ ஏஷ... ப்ரஸீததாம் - இது பாகவத ஸ்லோகம் (2-4-19). ஸ்ரீஹரியே ஸர்வோத்தமன். அனைத்து வேதங்களாலும் புகழப்படுபவன் அவனே. பிரம்மா, ருத்ர முதலான அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படுபவன். அத்தகைய ஸ்ரீஹரி திருப்தி அடையட்டும்.
விரஜ கல்யாணதம ஸுகு3ணாப்3தி4 ஸர்வகர்த்த
‘ஸ்ரீப்ரஸன்ன ஸ்ரீனிவாஸ’ ஸஹஸ்ர நாமனே நமோ
நீ ரசிஸி நுடிஸித்3து3 அர்ப்பிதவு ப்ரீதனாகோ3 ||ப
பல்லவி
குருவந்தர்கதனான, மத்வாந்தர்கதனான, பிரம்மனின் தந்தையான, லட்சுமிதேவியின் பதியான, அனைத்து கல்யாண குணங்களின் கடலான, அனைத்தையும் செய்பவனான, ‘ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸனே’, ஆயிரம் நாமங்களைக் கொண்டவனே - உனக்கு நமோ. நீயே என்னுள் இருந்து இயற்றச் செய்தது இது. இதனால் நீ திருப்தி அடைவாயாக.
||முன்னுரையான முதலாம் ஸந்தி முடிந்தது ||
||ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து||
No comments:
Post a Comment