Wednesday, October 12, 2022

#1 - அறிமுக ஸந்தி - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

அறிமுக ஸந்தி (முன்னுரை)

 கல்யாணதம ரூப அனக4 ஸுகு3ணார்ணவனெ

மாலக்ஷ்மிபதி பி3ரம்ம விஶ்வாக்2 விஷ்ணு வஷட்கார

ஶீல ஜீவோத்தம வர வாயு பி3ரம்மதா4மன ஹ்ருத்

கீலாலஜாந்தஸ்ய பரமாத்ம கேஶவ நமஸ்தே || 

அனந்த கல்யாண ரூபங்களைக் கொண்டவன்; தோஷங்கள் அற்றவன்; நற்குணங்களைக் கொண்டவன்; லட்சுமிபதி; உலகத்தை காப்பவன்; உலகின் அனைத்து செயல்களையும் செய்பவன்; வாயு பிரம்மர்களின் இதயத்தில் அந்தர்கதனாக இருப்பவன்; பரமாத்மனான கேசவனே, உன்னை வணங்குகிறேன். 

ஶாஸ்த்ரேஷு பா4ரதம் ஸாரம் தத்ர நாம ஸஹஸ்ரகம்

ஸ்ரீ விஷ்ணோ நின்னானந்தரூப நாமக3 தி3வ்ய

ஸஹஸ்ரநாம வர்ணக3ள் ப்ரதி3பாதி3ஸுதிவெ

ப்3ருஹதிஸஹஸ்ர போ4த்4யானந்த ரூபனே நமஸ்தே ||1 

சாஸ்திரங்களின் ஸாரமான பாரதம் - அதில் உள்ளதான ஆயிரம் பெயர்கள்; இவை - ஸ்ரீஷனான விஷ்ணுவே, உன்னுடைய அனந்தானந்த திவ்யமான இத்தகைய நாமங்களை, இந்த சஹஸ்ரநாமம் (இதில் உள்ள எழுத்துக்கள்) பிரதிபலிக்கின்றன. ப்ருஹதி சஹஸ்ரத்தினால் போற்றப்படுபவனான ஸ்ரீஹரியே, உன்னை வணங்குகிறேன். 

அனுஷ்டுப் சந்தஸ்ஸு ஶ்லோக ரூபத3லி ஸங்கலித

விஷ்ணுவின ஸஹஸ்ரநாமக3ளு பா4ரததி3

ஆம்னாயவு ப்3ருஹதி சந்தஸ்ஸு ரிக்கல்லி ஸஹஸ்ர

நாமக3 அர்த்த2ரூப ப்ருத2க் ப்ருத2க் விவ்ருத ||2 

அனுஷ்டுப் சந்தஸ் கொண்ட ஸ்லோகத்தினால் உள்ள விஷ்ணுவின் சஹஸ்ரநாமங்கள், பாரதத்தில் சொல்லி புகழப்பட்டுள்ளன; இவற்றை, ப்ருஹதி சந்தஸ் கொண்ட பத்யங்களில், இந்த சஹஸ்ர நாமங்களை அர்த்தத்தினை சொல்வதான தனித்தனியான பத்யங்களில் நான் விளக்குகிறேன்.

***


No comments:

Post a Comment