Saturday, October 15, 2022

#4 - அறிமுக ஸந்தி - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

                                           ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

அறிமுக ஸந்தி (முன்னுரை)

ப்ரணவாஷ்ட த்வாத3 அக்ஷரி கா3யத்ரி பும்ஸூக்த

ஆம்னாய ருகா3தி33 இதிஹாஸக3ளெரட3

4 பஞ்சராத்ர ஸாது4 புராணக3 பா43வத

கிருஷ்ணப்ரிய இவுக3 ஸார ஸஹஸ்ர நாம ||9 

இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமங்கள் ஆனவை இவை அனைத்தின் ஸாரமே ஆகும். அதாவது : பிரணவ மந்திரம், நாராயண அஷ்டாக்ஷர மந்திரம், வாஸுதேவ த்வாதாக்ஷர மந்திரம், காயத்ரி மந்திரம், புருஷ ஸூக்தம், ரிகாதி வேதங்கள், இதிகாசங்கள், சிறந்ததான பஞ்சராத்ரங்கள், புராணங்கள், பாகவத ஆகிய அனைத்தின் ஸாரமே ஆகும். 

நூரு ப்ரகாரார்த்த2 வித்3வத்ஸபெ4யல்லி தோரிஸித3

வரவாயு அவதார ஆனந்த3 தீர்த்த2கெ3 நமோ

ஸூரிவர்ய ஸத்யஸந்த4 தீர்த்தா2ர்ய வ்யாக்2யாத்ரோ நமோ

நாரதா3னுக்3ரஹி ஸ்ரீனிவாஸாசார்யரிகெ3 வந்தே3 ||10 

வரவாயுதேவரின் அவதாரரான, இந்த விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு (ஒவ்வொரு நாமத்திற்கும்) 100 அர்த்தங்கள் உள்ளன என்பதை சொல்லிக் காட்டிய ஸ்ரீஆனந்த தீர்த்தருக்கு நமோ. இதற்கு வ்யாக்யானம் எழுதிய, யதிகளில் சிறந்தவரான ஸ்ரீஸத்ய ஸந்த தீர்த்தருக்கு நமோ. நாரதரின் அருளைப் பெற்றவரான ஸ்ரீனிவாஸாசார்யருக்கும் என்னுடைய நமஸ்காரங்கள். 

அஷ்ட த்3வாதஷ3 ஷடக்ஷர கா3யத்ரி மந்த்ரக3

கிருஷ்ணமந்த்ர ஸஹ உப க்ரமோபஸம்ஹார ஜப

விஷ்ணு ஸஹஸ்ரநாம மத்து நுடிக3ள் பட2

கிருஷ்ணப்ரீத்யர்ப்பிபுது3 மனோவாக்காய ஶுசியிந்த3 ||11 

சுத்தமான மனம், வாக்கு, தேகத்துடன், உபகிரம, உபஸம்ஹார (துவக்க, இறுதியான ஸ்லோகங்களுடன்) மந்திரங்களுடன் - நாராயண அஷ்டாக்ஷர மந்திரம், வாஸுதேவ த்வாதச அக்ஷர மந்திரம், காயத்ரி மந்திரம், கிருஷ்ண மந்திரம் ஆகியவற்றை ஜெபம் செய்து, விஷ்ணு ஸஹஸ்ர நாம மற்றும் இந்த நுடிகளை படித்தால், ஸ்ரீகிருஷ்ணன் இவற்றால் மகிழ்கிறான்.

***


No comments:

Post a Comment