Tuesday, October 18, 2022

#7 - 3-4-5 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

3. ஸ்ரீ வஷட்காராய நம:

ஜீவ ஸ்வரூப கு3 த்3யுசித் ஸுகோ2ஜஸ் ஸஹ 3

தி3வ்யாபரோக் ப்ரதா3வஷட்காரநமோ எம்பெ3 |

ஸர்வஸ்யவஶி மஹா ஐஷ்வர்ய ஞான யஷஸ் வீர்ய

ஸ்ரீவைராக்3 கு3ணக்ரியா பூர்ணனாகி3 உள்ளவனே || 

ஜீவர்களின் ஸ்வரூப, குணங்களுக்கு ஏற்ப, அவர்களுக்கு, சுகம், சக்தி, வலிமை, அபரோக்ஷம் என கொடுக்கும்வஷட்காரஉனக்கு நமோ என்கிறேன். அனைத்து இடங்களிலும் வ்யாப்தன். மிகப்பெரிய செல்வம், ஞானம், புகழ், வீரம், வைராக்கியம், குணம், செயல்கள் என அனைத்தும் பூரணமாக உள்ளவனே. 

4. ஸ்ரீபூதபவ்ய பவத்ப்ரபவே நம:

பூ4தப4வ்ய 4வத்கால ஜனக்கெ ஒள்ளெ ஶ்வர்ய

ப்ரத3பூ4தப4வ்ய 4வத்ப்ரப4வேநமோ நமஸ்தே |

ஹிந்தி3 முந்தி3 ஈகி3 மூரு காலத3ல்லு

எந்தி3கு3 பிரபு4 நீனு மங்க3ளப்ரத3னு ஸ்ரீபதியு || 

இறந்த, நிகழ், எதிர்கால ஜீவர்களுக்கு நற்செல்வங்களை கொடுப்பவனான ‘பூதபவ்ய பவத்பிரபுவே உனக்கு நமஸ்காரங்கள். இந்த அனைத்து காலங்களிலும் நீயே அனைவரின் பிரபு (தலைவன்). நீயே மங்களப்ரதன். ஸ்ரீபதி. 

5. ஸ்ரீபூதக்ருதே நம:

ருத்3ரன்ன ஸ்ருஷ்டிஸிதி3பூ4தக்ருத்நமோ நமோ எம்பெ3

க்ஷுத்3 பூ4தாதி33ளுபத்ரவ களெது3 பொரெவி

மோத3மய நீ ஸ்வதந்த்ர ஸர்வப்ராணிக3 ஸ்ரஷ்டா

யதோவா இமானிஇந்தா ஶ்ருதி ஹொக3ளுதிவெயு || 

ருத்ரரை படைத்தவனான ‘பூதக்ருத் உனக்கு நமஸ்காரங்கள். கெட்ட பூதங்களின் தொந்தரவுகளை களைந்து காக்கிறாய். ஆனந்தமயன். ஸ்வதந்த்ரன். அனைத்து ப்ராணிகளையும் காப்பவன். உன்னை ஸ்ருதியானது ‘யதோவா இமானி (ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்திற்கு நீயே காரணம் என்று தைத்திரிய உபநிஷத் வசனம்) என்று புகழ்கிறது. 

***

No comments:

Post a Comment