Thursday, October 20, 2022

#9 - 9-10-11 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

9. ஸ்ரீ பூதபாவனாய நம:

ஸர்வ ப்ராணிக3 உத்பாத3கனுபூ4தபா4வன

ஸர்வதா3 நமோ நினகெ3 ப்ராணி மனோ ஸஞ்சரனே

ஸர்வ ப்ராணி மனோவ்ருத்தி மாடி3ஸுவி காரயித

ஸர்வபூ4தக3 ஸத்தா ப்ரவ்ருத்தாதி33 தா3தா || 

அனைத்து பிராணிகளையும் படைப்பவன். பூதபாவனனே உனக்கு நமஸ்காரங்கள். பிராணிகளின் மனங்களில் சஞ்சரிப்பவனே. அனைவரின் மனதின் செயல்களை செய்விப்பவன் நீயே. அனைவருக்கும் சுக துக்கங்களைக் கொடுப்பவன் நீயே. 

10. ஸ்ரீ பூதாத்மனே நம:

நிர்தோ3 ஸுபவித்ர ரூபபூதாத்மநமோ எம்பெ3

ஶஶ்வத் ஸுபவித்ர மூல அவதார ஸர்வத3லு

ஸதா3 அபஹத பாப்மா நிர்லிப்த நீனு ஸம்போ43

ப்ராப்திசேன்ன வைஷேஷ்யாத்எந்து நிர்ணய ஸூத்ரத3ல்லி || 

தோஷங்கள் அற்றவனே, பவித்ரமான ரூபத்தைக் கொண்ட ‘பூதாத்மா உனக்கு நமஸ்காரங்கள். மூல ரூபம், அவதார ரூபங்கள் என அனைத்திலும், எவ்வித குறைகளும் இல்லாதவன். நிர்லிப்தனாக இருப்பவன் (எதிலும் சம்பந்தப்படாமல் இருப்பவன்).  ஸம்போக ப்ராப்திசேன்ன வைஷேஷ்யாத் - என்று ஸூத்ர பாஷ்யத்தில் இதுவே சொல்லபட்டிருக்கிறது. 

11. ஸ்ரீ பரமாத்மனே நம:

4க்தருக3ளல்லி ப்ரீத அனுக்3ரஹ மாடு3வவ

4க்தேஷ்டப்ரிய விஷயபரமாத்மனேநமஸ்தே

நத்3யைவா கேஶவாத் பரமம்ஸ்ரீஶனெ ஸர்வோத்தமனு

கீ3தோக்தியுமத்த: பரதர நான்யத் கிஞ்சித3ஸ்தி || 

பக்தர்களிடம் அன்பாக இருப்பவன். அவர்களுக்கு அருள்பவன். பக்தர்களால் விரும்பப்படும் விஷயம் நீயே - பரமாத்மனே, உனக்கு நமஸ்காரங்கள். கேசவனைவிட உயர்ந்தவன் வேறு யாரும் இல்லை (மகாபாரத வசனம்). கீதை வசனம் -> என்னை விட உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை (7-7).

***


No comments:

Post a Comment