ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
30. ஸ்ரீ நித4யே நம:
ப்ராணிக3ள ஸ்தா2னரூப ‘நிதி4’ நீனு நமோ எம்பெ3
‘நிதீ4யதே ஹ்ருதி3 ஸஜ்ஜனைரிதி நிதி4:’ ஹீகெ3ந்து3
இஹுது3 ஸ்ரீ ஸத்யஸந்தா4ர்யர வ்யாக்2யானவு
ப்ராணிக3ள நின்னல்லி இட்டுகொம்பி3 ப4க்த நிதி4யே
ப்ராணிகளின் இருப்பிடம் ‘நிதி’ நீயே உனக்கு நமஸ்காரங்கள். ஸ்ரீ ஸத்ய ஸந்தரின் வ்யாக்யானத்தில் - ‘நிதீயதே ஹ்ருதி ஸஜ்ஜனைரிதி நிதி:’ என்று இருக்கிறது. பிராணிகளை உன்னிடம் வைத்துக் கொள்கிறாய். பக்தர்களின் நிதியே.
31. ஸ்ரீ அவ்யயாய நம:
நாஶவில்லத3 நீனு ‘அவ்யய’ நமோ நமோ எம்பெ3
நீனு ஸவித்ரு மண்ட3ல மத்4யவர்த்தி நாராயண
ஶஶ்வதே3க ப்ரகார நின்ன ப3லாதி3 கு3ணக3ளு
அக்ஷேண அவிகார நித்யவு பூர்ண ஸர்வோத்க்ருஷ்ட
அழிவில்லாத நீ ‘அவ்யய’ என்று அழைக்கப்படுகிறாய். உனக்கு நமஸ்காரங்கள். ‘ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி நாராயண’ நீயே. உன்னுடைய பல முதலான குணங்கள் என்றும் குறைவதில்லை, மாற்றம் கொள்வதில்லை, நித்யமானவை. முழுமையானவை மற்றும் மிகச் சிறந்தவை.
32. ஸ்ரீ ஸம்ப4வாய நம:
இச்சோத்பத்திகா3ஶ்ரயனே ‘ஸம்ப4வ’ நமோ நினகெ3
மச்ச கச்சப வராஹ ந்ருஸிம்ஹாதி3 ரூபக3ளு
ஸ்வேச்சா அவதாரக3ள ஆவிர்ப4விஸி ஆகா3க3
ப்ரோச்ச ஸுக2 தேஜஸ் ப3ல ஸ்வரூப நமஸ்தே ஹரே
விருப்பங்களை உருவாக்க காரணமாக இருப்பவனே. ஸம்பவனே உனக்கு நமஸ்காரங்கள். மச்ச, கூர்ம, வராக, நரசிம்மாதி ரூபங்கள் நீயே. தன் இஷ்டத்திற்கேற்ப அவதாரங்கள் மூலமாக தோன்றிகிறாய். ஸுகமயமானவன். தேஜஸ் கொண்டவன். பல ஸ்வரூபன். ஸ்ரீஹரியே உனக்கு நமஸ்காரங்கள்.
***
No comments:
Post a Comment