Friday, October 21, 2022

#10 - 12-13-14 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***


12. ஸ்ரீமுக்தானாம் பரமாயை கதயே நம:

முக்தருக3 பரம ப்ராப்யனாகி3 இருவி நீ

முக்தானாம் பரமாக3தயே நமஸ்தே வ்யாஸ உக்தி

முக்தோபஸ்ருஷ்ட2 வ்யபதே3ஶாச்சஸூத்ர நிர்ணயவு

மத்துபரஞ்யோதி ரூபஸம்ப3த்யஇத்யாதி33ளு 

முக்தர்கள் அடையும் பொருளாக நீயே இருக்கிறாய். முக்தர்களுக்கான பரம கதியே, உனக்கு நமஸ்காரங்கள்.  ‘முக்தோபஸ்ருபவ்யபதேஷாத் மற்றும் ‘பரஞ்சோதி ரூபஸம்பத்ய என்னும் பிரம்ம ஸூத்ர பாஷ்யங்களும் இதையே சொல்கிறது. 

13. ஸ்ரீ அவ்யயாய நம

அஹல்ய அவினா கு3ணரூபஅவ்யயநமோ

கல்யாண கு3ணகு3ணார்ணவனு எந்தி3கு3 நீனு

மாலின்ய விகாராதி3 நால்குவித4 நாஶவில்லவு

எல்ல கு3ணரூபக3ளு ஸம்பூர்ணவு ஶாஶ்வதவு 

அழகான, அழிவில்லாத, குண ரூபங்களைக் கொண்ட ‘அவ்யயனே உனக்கு நமஸ்காரங்கள். கல்யாண குணங்களை, எப்போதும் கொண்டவன் நீ. விகாரம் முதலான நான்கு வித அழிவுகள் (தோற்றம், அழிவு, வளர்ச்சி, குறைவு) இல்லாதவன் நீ. உன்னிடம் இருக்கும் அனைத்து குண ரூபங்களும் முழுமையானவை மற்றும் அவை நிரந்தரமானவை. 

14. ஸ்ரீபுருஷாய நம:

3ஹுவாத3 ஈப்ஸிதார்த்த2 ஈவிபுருஷனேநமோ

பஹள ஸாத4 கெ3ய்ஸி அரிஸமூஹவ கேளி

ஸ்ரீஹரே நீ பூர்ணமோக்ஷாக்ய 2லகொடு3வவனு

மஹார்ஹபூர்ணைஶ்வர்ய ரூப ஹ்ருஷிகே ஸர்வக்ஞ 

அனைத்து விதமான விருப்பங்களையும் (புருஷார்த்தங்களையும்) நிறைவேற்றும், புருஷனே உனக்கு நமஸ்காரங்கள். அதிகமான ஸாதனைகளை புரிந்த உன் பக்தர்களுக்கு நீ மோட்சம் முதலான பலன்களைக் கொடுக்கிறாய். அபரிமிதமான, முழுமையான ஐஸ்வர்யங்களைக் கொண்ட ரூபத்தைக் கொண்டவன். ஹ்ருஷிகேஷன். ஸர்வக்ஞன்.

**


No comments:

Post a Comment