[பத்யம் #135] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 135]
தா3ஸ த4ர்மத3 கோ1ஶவிது3 கம
லேஶ கருணதி3 ப3ரெயிஸித3 உப
தே3ஶ மாதுக3ளார்த்த ப4க்தரிகி3ஷ்ட ஸல்லிஸலி |
லேஶப4க்தி விரக்தி ஞானவ
ஆஶிபரிகெ3 ரமேஶ த3யத3லி
தா1ஸு தா1ஸிகெ3 த்ராஸு கொட3த3லெ போஷிஸுத்திரலி ||135
தாஸ தர்மத - ஹரிதாஸ தர்மத்தின்; கோஷவிது - அகராதி இது ஆகும்; கமலேஷ - ஸ்ரீஹரி; கருணதி பரெயிஸித - கருணையுடன் அருளி எழுத வைத்தான்; உபதேஷ மாதுகள - இந்த உபதேச பேச்சுக்களின்; அர்த்த - விஷயம்; பக்தரிகெ - பக்தர்களுக்கு; இஷ்ட ஸல்லிஸலி - அவர்கள் விரும்பியதை கொடுக்கட்டும்; பக்தி விரக்தி ஞானவ - ஞான பக்தி விரக்திகளை; லேஷ - சிறிதளவு; ஆஷிபரிகெ - வேண்டுபவர்களுக்கு; ரமேஷ - ஸ்ரீஹரி; தாஸு தாஸிகெ - ஒவ்வொரு மணித்துளிக்கும் (எப்போதும்); த்ராஸு கொடதலெ - கஷ்டத்தைக் கொடுக்காமல்; தயதலி - கருணையுடன்; போஷிஸுத்திரலு - காத்துக் கொண்டிருக்கட்டும்.
இந்த கிருதியின் பலன்களை மேலும் தொடர்ந்து சொல்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
இந்த கிருதியானது, ஹரிதாஸ தர்மத்தின் அகராதி ஆகும். ஸ்ரீஹரி கருணையுடன் அருளி, என்னை இதனை எழுத வைத்தான். இந்த உபதேச பேச்சுக்களின் விஷயம் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியதை கொடுக்கட்டும். ஞான பக்தி விரக்திகளை சிறிதளவு வேண்டுபவர்களுக்கு, ஸ்ரீஹரி எப்போதும் நிரந்தரமாக கொடுத்து, கருணையுடன் காத்துக் கொண்டிருக்கட்டும்.
***
No comments:
Post a Comment