Friday, November 11, 2022

#31 - 75-76-77 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

75. ஸ்ரீ மாத4வாய நம:

ஞானாதி4பதி நீனுமாத4வனேநமோ நினகெ3

நீனு த்ரயீமயனு 4ர்மமய தபோமயனு

ஞானாதி3 ஷக்திபூர்ணெ மாயாதே3விய ரமணனெ

நினகெ3 உத்தமரில்ல பரவாஸுதே3 கிருஷ்ண 

ஞானாதிபதி நீ. ‘மாதவனே உனக்கு நமஸ்காரங்கள். மூன்று வேதங்களால் புகழப்படுபவன். தர்மமயன். தபோமயன். ஞானாதி ஷக்தி பூர்ணன். மாயாதேவியின் ரமணன். உன்னை விட உத்தமர்கள் வேறு யாரும் இல்லை. பரவாஸுதேவனே. கிருஷ்ணனே. 

76. ஸ்ரீ மது4ஸூத3னாய நம:

ஞானவன்னு நிராஸமாட3தக்கத்3தா33 அஞ்ஞான

வன்னு நா மாடு3வி நீமது4ஸூத3நமஸ்தே

ஞான ஆச்சாத3 ஶைவல அவித்3யாதி33ளன்னு

நீ நீகி3ஸி ஞான ஒத3கி3ஸுவி வ்யாஸ ஹயாஸ்ய 

ஞானத்தை குறைக்கக்கூடிய அஞ்ஞானத்தை நீ அழிப்பாய். ‘மதுஸூதனனே உனக்கு நமஸ்காரங்கள். ஞானத்தை மறைக்கக்கூடிய அவித்யைகளை நீ போக்கி, ஞானத்தைக் கொடுக்கிறாய். வ்யாஸனே. ஹயக்ரீவனே. 

77. ஸ்ரீ ஶ்வராய நம:

ருத்3ரன கு3ணக்கிந்த ஸ்ரேஷ்ட ஸ்வரூபனெஶ்வர

வந்தே3 நமோ நமோ பத்3மஜ வாய்வாதி3 ஸுரஸ்ரேஷ்ட

பத்3மாலய பதியு ஸ்வேச்சா ப்ரவர்த்தகனு நீனு

ஸத்யகாமனு ஸத்யஸங்கல்ப நிரவத்3 ஸ்வாமி 

ருத்ரனின் குணத்தைவிட சிறந்த ஸ்வரூபனே. ‘ஈஶ்வரனே உனக்கு நமஸ்காரங்கள். பிரம்மா, வாயு ஆகியோரைவிட சிறந்தவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் பதியே. தன் இஷ்டப்படியே அனைத்து செயல்களையும் செய்பவன் நீ. விருப்பங்களை நிறைவேற்றுபவன். சொன்னதையே செய்பவன். யாராலும் வெல்லப்பட முடியாதவன். ஸ்வாமி.

***


No comments:

Post a Comment