ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
99. ஸ்ரீ ஸர்வேஶ்வராய நம:
ஸர்வ ப்ரகாரதி3 நிபுண க்ரூர அரிக3ளன்ன
நிவாரண மாள்ப ‘ஸர்வேஶ்வர’ நமோ நமோ எம்பெ3
ஸர்வேஶாம் ஈஶ்வரனு நீனு ராவணாதி3 வித்4வம்ஸி
தே3வதே3வோத்தம ப3லாத்3யமித ஶக்த ஸ்வதந்த்ர
அனைத்திலும் நிபுணன். கெட்ட அரிகளை (அரிஷட் வர்கங்களை) அழிப்பவன். ‘ஸர்வேஶ்வரனே’ உனக்கு நமஸ்காரங்கள். அனைவருக்கும் ஈஶ்வரன் நீயே. ராவணாதி அசுரர்களைக் கொன்றவன். தேவதேவோத்தமன். வலிமை முதலான அபாரமான சக்திகளைக் கொண்டவனே. ஸ்வதந்த்ரனே.
100. ஸ்ரீ ஸித்3தா4ய நம:
மருத்க3ள் தத்3தே3வதெக3ள் விஹித ஸர்வ சேஷ்டெய
தா4ரகனு ஸ்பூர்த்தித3னு நீ ‘ஸித்த’ நமோ நினகெ3
ஸம்ரக்ஷிஸுவி ஸாது4ஜனரன்ன ஸர்வ ஆதா4ர
ஸர்வக்3ஞ உருக்3ஞானரூப நீ ப4க்தரிகெ3 க3ம்ய
வாயு தேவருக்கு, தேவதைகளுக்கு தக்க செயல்களைக் கொடுத்து செய்விப்பவனே. அவர்களுக்கு சக்தியை கொடுப்பவனே. ‘ஸித்தனே’ உனக்கு நமஸ்காரங்கள். ஸாது மக்களை காப்பாயாக. அனைவரின் ஆதாரமானவனே. ஸர்வக்ஞனே. மிகச்சிறந்த ஞானரூபனே. நீ பக்தர்களுக்கு கிடைப்பவனாக இருக்கிறாய்.
101. ஸ்ரீ ஸித்3த4யே நம:
மருத்க3ள ஸுகி2யந்தெ பாலிஸித3 ‘ஸித்3தி4’ நமோ
ஸம்ரக்ஷணே மாடு3தி ஸாது4 ஸத்3ப4க்த ஜனரன்ன
ஶரணெம்பெ3 த4ர்மாத்மா ப4க்தேஷ்ட ஸித்3தி4 நீனிருவி
நிரதிஶயரூப ப2லி ப2லஜாதா ஸுப2ல
வாயு தேவருக்கு / தேவதைகளுக்கு நண்பனாக இருந்து காப்பவனே ‘ஸித்தி’யே உனக்கு நமஸ்காரங்கள். ஸாது / ஸஜ்ஜனர்களை நீ காக்கிறாய். உன்னிடம் சரணடைகிறேன். தர்மாத்மனே. பக்தர்களை உன்னை அடையவே விரும்புகிறார்கள். அற்புதமான ரூபம் கொண்டவனே. நல்ல பலன்களை கொடுத்து அருள்பவனே.
***
No comments:
Post a Comment