ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
93. ஸ்ரீ அன்ஹே நம:
ப்ரக்ருஷ்ட ஞானக்கெ விஷய ஆகாஶ ‘அஹ:’ நமோ
ஆகாஶ எந்த3ரெ ‘ஆஸமந்தாத் காஶயதி’ நீனு
ஹ்ருத்கு3ஹ த3ஹர ஆகாஶ எம்ப3 பி3ம்ப3 ரூப
ப்ரகாஶிஸி அபரோக்ஷவீயலு உபாஸிதவ்ய
ஞானத்தால் அறியப்படும் விஷய ஆகாஶமே. ’அஹ:’னே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆகாஶமே என்றால் ‘ஆஸமந்தாத் காஶயதி’ - நீ இதய குகைக்குள், ஆகாஶ என்னும் பிம்ப ரூபமாக ஒளிர்ந்து, அபரோக்ஷத்தை கொடுக்கிறாய்.
அதற்காகவே உபாஸனை செய்யத் தக்கவன்.
94. ஸ்ரீ ஸம்வத்ஸராய நம:
ப4க்தரிகெ3 ஒலிது3 நீ வாத்ஸல்ய நீடு3வியோ
ஸதா3 நமோ ‘ஸம்வத்ஸர’ ஹித த3யமாடெ3ன்னலி
ப4க்தரு ஞானிக3ள ஹிதகரனு ஸமுத்3த4ர்த்த
ஸம்வத்ஸர நீ என்னொளு ஸம்வஸ பாஹி க்ருபெயா
பக்தர்களுக்கு அருளி நீ வாத்ஸல்யத்தை அருள்கிறாயே.
எப்போதும் உன்னை வணங்குகிறேன் ‘ஸம்வத்ஸரனே’. என்னில் கருணையைக் காட்டுவாயாக. பக்தர்களுக்கும்,
ஞானிகளுக்கும் ப்ரியமானவனே. ஸம்வத்ஸரனே. நீ எனக்குள் இருந்து என்னை அருள்வாயாக.
95. ஸ்ரீ வ்யாளாய நம:
ஶத்ரூன் வாரயதீதி ‘வ்யாள:’ நமோ எம்பெ3 நினகெ3
ஶத்ருக3ள ஸம்ஹரிஸி ஸாது4க3ள ஸலஹுவி
சக்ரத4னுர்லஸச்சங்க2 கௌமோத3கி க2ட்3க3த4ர
ஹொர ஒளகி3ன ஶத்ருக3ள தரிது3 காயென்ன
எதிரிகளை அழிப்பதால் ‘வ்யாள:’ என்று அழைக்கப்படுபவனே,
உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளை அழித்து, ஸஜ்ஜனர்களை காக்கிறாய். சக்ர, தனு, சங்க,
கௌமோதகி, வாள், ஆகிய ஆயுதங்களை தாங்கி, அக / புற எதிரிகளை அழித்து, என்னை காப்பாயாக.
***
No comments:
Post a Comment