Sunday, November 13, 2022

#33 - 81-82-83 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

81. ஸ்ரீ விக்ரமாய நம:

பராக்ரம சரிஸுவிவிக்ரமநமோ நினகெ3

த்ரிவிக்ரமனெ பாத3 விக்ஷேபகர்த்த விஶ்வரூப

4ராந்தரிக் தி3வி அளெதி3 விதி4 பூஜிதனெ

உருபராக்ரம விஷ்ணோர்னுகம் ஶ்ருதிவேத்3 

பராக்ரமசாலியானவனே. ‘விக்ரமனே உனக்கு நமஸ்காரங்கள். த்ரிவிக்ரமனே. பாதங்களால் விஶ்வரூப தரிசனம் எடுத்து, பூமி, அந்தரிக்‌ஷ, ஆகாயம் என அளந்தாய். பிரம்மனால் பூஜிக்கப்படுபவனே. அபாரமான பராக்ரமம் கொண்டவனே. ‘விஷ்ணோர்னுகம்என்னும் ஶ்ருதியால் போற்றப்படுபவனே. 

82. ஸ்ரீ க்ரமாய நம:

பூ4மியலி உத3கக3தி வ்ருத்3தி4ஸ்தித்யாதி33

நீ மாடு3விக்ரமநமோ ஸூர்யாந்தர்க3 வாயுஸ்த2

பூ4மியலி வராஹனு தி3வியல்லி வாமனனு

லக்ஷ்மீ  ந்ருஸிம்ஹனு அந்தரிக்ஷஸ்த2 ஸர்வஸ்த2 விஷ்ணு 

பூமியில் தண்ணீரில் வேகத்தை அதிகம் / குறைவுபடுத்துகிறாய். ‘க்ரமனே உனக்கு நமஸ்காரங்கள். சூரியனில் இருப்பவனே. வாயுவில் அந்தர்யாமியே. பூமியில் வராகனாக இருப்பவனே. ஆகாயத்தில் வாமனனே. லட்சுமி நரசிம்மனே. அந்தரிக்‌ஷத்தில் இருப்பவனே. அனைத்து இடங்களிலும் இருப்பவனே. விஷ்ணுவே. 

83. ஸ்ரீ அனுத்தமாய நம:

நீனேனெ ஸர்வோத்தமனு அனுத்தம நமோ ஸ்ரீ

நினகெ3 உத்தமரில்ல ப்ரேரகரில்ல ஸ்வதந்த்ர

வனஜாஸன ஶிவாத்3யுத்தமளு அம்ப்4ரணி ஸ்ரீயு

க்ருஷ்ணோக்திமத்த:பரதரம் நான்யத் கிஞ்சித3ஸ்தி 

நீயே ஸர்வோத்தமன். ஒப்புமை இல்லாதவன்.  ‘அனுத்தமனே உனக்கு நமஸ்காரங்கள். லட்சுமிதேவியின் தலைவனே. உன்னைவிட சிறந்தவர்கள் யாரும் இல்லை. உன்னை நடத்துபவர்கள் யாரும் இல்லை. ஸ்வதந்த்ரனே. கீதை 7-7 ஸ்லோகத்தில் ஸ்ரீகிருஷ்ணனே சொல்வது - என்னைவிட உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை அர்ஜுனனே.


***


No comments:

Post a Comment