Friday, November 4, 2022

#24 - 54-55-56 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

54. ஸ்ரீ ஸ்த2விஷ்டாய நம:

அத்யந்த தேஜஸ்வியேஸ்த2விஷ்டனேநமோ நினகெ3

பூ4 பஞ்சக பி3ரம்மாண்ட ஒள ஹொரகெ3 ஸர்வஸ்த2

ஸுதேஜஸ்தம விராண்ணாம புருஷனே நமஸ்தே

மார்த்தாண்ட3 33ராதி33ளிகெ3 தேஜஸ் ப்ரதா3 

அபாரமான தேஜஸ்வியே. ஸ்தவிஷ்டனே உனக்கு நமஸ்காரங்கள். பஞ்ச பூதங்களால் நிரம்பிய இந்த பிரம்மாண்டத்தின் உள்ளே வெளியே அனைத்து இடங்களிலும் வ்யாப்தன் நீயே. அற்புதமான தேஜஸ் கொண்டவன். புருஷனே. உனக்கு நமஸ்காரங்கள். சூரிய, சந்திரர்களுக்கு ஒளி கொடுப்பவன் நீயே. 

55. ஸ்ரீ ஸ்த2விராய நம:

ரத2ஸ்த2 நீஸ்த2விரநமோ நம்ம தே3 எம்ப3

ரத23ல்லி ரதி2 ப்ராணனே ஸ்ரீஹ்ரீ ஸமேதனு

வாததே3வனிந்த3 ஸேவெ கொள்ளுதலி இருவி நீ

ஜக3த்பிதாமஹ தாத நமோ ப்ரபிதாமஹனே 

ரதத்தில் வருபவன் நீயே. ஸ்தவிரனே உனக்கு நமஸ்காரங்கள். இந்த என்னுடைய தேகம் என்னும் ரதத்தில் தலைவனாக வீற்றிருப்பவனே. ப்ராணனே. ஸ்ரீலட்சுமிதேவி உடனே இருப்பவனே. வாயுதேவர் மூலமாக சேவை பெற்றுக் கொள்பவனே. உலகின் பிதாமகனான பிரம்மனின் தந்தையே. ப்ரபிதாமகனே. உனக்கு நமஸ்காரங்கள். 

56. ஸ்ரீ த்4ருவாய நம:

33 மண்ட3லத3லி ஸஞ்சரிப ஸூர்யனன்ன

வேக33தியிந்த3த்4ருவமண்ட3லத3 3தி3யல்லி

ஶீக்4 மேலெ எத்திஸுவ த்4ருவனே நமோ நினகெ3

விகார க்ஷயாதிக3ளில்லத3 ஸ்தை2ர்யப3லரூப 

வான் மண்டலத்தில் சஞ்சரிக்கும் சூரியனை, வேகமாக ‘த்ருவ மண்டலத்தின் வழியில் நிறுத்துபவனான ‘த்ருவனே உனக்கு நமஸ்காரங்கள். விகார (உருவ மாற்றங்கள்) இல்லாதவனே. ஞான, பல ரூபனே. 

***


No comments:

Post a Comment